களில்,வீழ்ந்துபோற்றி - வீழ்ந்து வணங்கி,- மறுப்பது புரியாஞானி - (சரணமடைந்தவரது வேண்டுகோளைத்) தடுத்தல்செய்யாத தத்துவஞான முடையவனான அம்முனிவனது, மனம் துனி - மனத்திலடங்கிய சிறு கோபத்தையும், அகற்றினான் - போக்கினான்; "சிறியோர்செய்த சிறுபிழையெல்லாம், பெரியோராயிற்பொறுப்பது கடனே"என்றார் பிறரும். சிறியவர் - அறிவாலும் ஒழுக்கத்தாலும் பிராயத்தாலும்சிறியவர். பூஸு ரன் என்ற வடசொல்லுக்கு - (பிரமதேஜசினால்) பூமியில்தேவன்போல விளங்குபவ னென்பது பொருள். பிறர்வேண்டுகோளுக்குஇசையாமல் மறுதலிக்குங் குணம் இயல்பிலேயே யில்லாதவ னென்பார்,'மறுப்பது புரியா ஞானி' என்றார்; இத்தொடர்க்கு - எவராலும்தடுக்கவொண்ணாத கல்வியறிவுடையவனென்ற பொருளும் அமையும். சிறியவர்செய்ததீமை -இடைநிலைத்தீவகம். (293) 135.-உத்தரகுமாரனைக்கண்டுசுதேட்டிணை மகிழ்தல். ஆன்றமைந்தடங்குகேள்வியண்ணலுமவனைப்பெற்ற தோன்றலும்பின்னர்ச்சென்றுசுதேட்டிணைகோயிலெய்த ஈன்றவப்பொழுதினோகையெண்மடங்காகவிஞ்சச் சான்றதன்மகனைக்கண்டுமகிழ்ந்தனடவத்தின்மிக்காள். |
(இ -ள்.) ஆன்று அமைந்து அடங்கு கேள்வி - மிக நிறைந்து அடங்கியிருக்கின்ற நூற்கேள்வியையுடைய, அண்ணல்உம் - பெருந்தன்மையிற் சிறந்தவனான உத்தரனும், அவனை பெற்ற தோன்றல்உம் - அக்குமாரனைப் பெற்ற தந்தையான விராடராசனும், பின்னர் - பின்பு, சுதேட்டிணை கோயில் - சுதேட்டிணைவாழ்கின்ற அந்தப்புரத்துக்கு, சென்று எய்த - போய்ச்சேர,- தவத்தின் மிக்காள் - தவத்தினால் மிக்கவளாகிய அவள்,- சான்ற தன் மகனை கண்டு - (வெற்றியாற்) சிறந்த தனது குமாரனைப் பார்த்து, ஈன்ற அ பொழுதின் ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச - (தான் அப்) பிள்ளையைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியினும் (இப்பொழுதை) மகிழ்ச்சி எட்டுப்பங்கு அதிகமாகப் பெருகாநிற்க, மகிழ்ந்தனள் - சந்தோஷமடைந்தாள்; (எ - று.) ஈன்றபொழுதை மகிழ்ச்சி - "வயாவும் வருத்தமும் ஈன்றக்கானோவும், கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தா அங்கு" என்பதனாற் காண்க. புதல்வனை மடியிற்கண்ட பொதுஉவகையினும் சால்புடையனாகக்கண்ட சிறப்புஉவகை பெரிதாதலால், 'ஈன்றவப்பொழுதினோகை யெண்மடங்காக விஞ்ச' என்றார்; "ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக் கேட்ட தாய்" என்றார் திருவள்ளுவரும். ஓகை - உவகை: மரூஉ. எண்மடங்கு என்றது - பலமடங்கு என்றபடி. ஆகவே, தாயின் உவகைக்கு அளவின்றென்றவாறாம். இங்குத் தாய்க்குத் தவம் - இவ்வாறு நல்லறிவும் நல்லொழுக்கமுமுடைய குமாரனைப் பெறுதற்கு ஏற்ற நல்வினை. |