பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 203

அடங்குகேள்வி - அடக்கமுடையவனாயிருத்தற்குக் காரணமான நூற்கேள்வி
யெனினுமாம்.                                               (294)

136.-பிருகந்நளை செய்தி.

ஓடியுத்தரன்றேரூரவொருமுனையாகத்தன்னை
நாடியுத்தரிக்கமாட்டாநராதிபர்பதாகைத்தூசும்
கோடியுத்தரியப்பட்டுங்குழமகன்றனக்குநல்கிப்
பேடியுத்தரைதன்னோடும்பெற்றதாய்பின்புநின்றாள்.

      (இ -ள்.) பேடி - பேடியாகிய பிருகந்நளை,- உத்தரன் -
உத்தரகுமாரன்,ஓடி - (முதலிற் பகைவர்சேனையைக்கண்டு) அஞ்சியோடி, தேர்
ஊர - (பின்புதன்வார்த்தையால் தெளிந்து) தேரையோட்ட, (தான்
சென்றுபொருது), தன்னைநாடி - தன்னைக்கண்டமாத்திரத்திலே, ஒரு முனை
ஆக - ஒரே துணிவாக,உத்தரிக்கமாட்டா - முன்நிற்கமாட்டாமற்போன,
நரஅதிபர் -(துரியோதனன்முதலிய) அரசர்களது, பதாகை தூசுஉம் -
கொடிச்சீலைகளையும்,கோடி உத்தரியம் பட்டுஉம் - (அவர்கள்மேலே
தரித்திருந்த) அனேகம்பட்டாடைகளையும், குழமகன் தனக்கு -
(உத்தரைவைத்துக்கொண்டுவிளையாடு கின்ற) பிரதிமைக்காக, நல்கி -
(அலங்கரித்தற்பொருட்டுக்)கொடுத்து, உத்தரை தன்னோடுஉம் -
உத்தரையுடனே, பெற்ற தாய் பின்புநின்றாள் - அவளையீன்ற தாயாகிய
சுதேட்டிணையின் பின்புறத்தில்ஒதுங்கிநின்றாள்; (எ - று.)

     இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.  கீழ் 102 - ஆஞ்
செய்யுளில் "மணிக்கொடித்" தூசுந் தூசும், உத்தரைவண்டற்
பாவைக்குடுத்துதற்கென்று கொய்தான்" என்று கூறியவர், அவற்றை
அப்பிருகந்நளையாகிய அருச்சுனன் உத்தரைக்குக் கொடுத்த செய்தியை
இங்குக் கூறினர்.  குழமகன் - மரப்பாவை; இளமகன்போன்ற
வடிவமைந்ததென்று காரணப்பொருள் காணலாம்.  உத்தரன் தேரூர, ஓடி -
(தான்) விரைந்துசென்று என்றுமாம். 'ஒருமுனையாக தன்னைநாடி -
ஒரேதுணிவாகத் தன்னைக் குறித்துப் போர்க்குவந்து, உத்தரிக்கமாட்டா -
(பின்பு) முன்னிற்க மாட்டாமற்போன' என்றலும் அமையும்.  கோடி -
புதுமையுமாம்.  நரஅதிபர் - மனிதர்க்குத்தலைவர்.  உத்தரீயம் - மேலாடை;
வடசொல்.  உத்தரியப்பட்டு - உத்தரீயமாகிய பட்டு என இருபெயரொட்டு.
நாணத்தால் மகளிர்பின்னே யொதுங்கிநிற்றல், பேடியரியல்பு.          (295)

137.-நிகழ்ந்த செய்திகளைஉத்தரன் ஏகாந்தத்தில்
தந்தைக்குக் கூறத்தொடங்குதல்.

தந்தையுந்தானுமாங்குத்தனித்திருந்தடையலாரை
முந்தியவமரிற்சென்றுமுனைந்துபோர்விளைத்தவாறும்
வந்தவர்சாய்ந்தவாறுமணிநிரைமீட்டவாறும்
சுந்தரகிரிகள்போலுந்தோளினான்றோன்றச்சொல்வான்.