பக்கம் எண் :

206பாரதம்விராட பருவம்

அப்பொழுது)எடுத்துச் சொல்லி வருகின்றவனான கங்கபட்டன், அறத்தின்
மகன் ஆகவேண்டும் - தருமபுத்திரனாக இருத்தல்வேண்டும்; மரு மலர்உம் -
நறுமணமுள்ள மலர்களையும், மான்மதம்உம் - கஸ்தூரிப்புழுகையும், துறந்த -
இழந்திருக்கின்ற, கூந்தல் - கூந்தலையுடைய, வண்ணம் மகள் -
அலங்காரஞ்செய்யும் பணிப்பெண்ணாகிய விரதசாரணி, பாஞ்சாலன் மகள்ஏ
போலும் - பாஞ்சாலதேசத்தரசனான துருபதனுடைய மகளாகிய
திரௌபதிபோலும்; வெருவரும் மல்போர் கடந்த - அஞ்சத்தக்க
மல்லயுத்தத்தில் (எல்லாமல்லரையும் வென்றுவந்தானொரு மல்லனைச்) சயித்த,
மடையன்தன்னை - சமையற்காரனாகிய பலாயநனை, வீமன்என
அயிர்க்கின்றேன் - வீமசேனனென்று நினைக்கின்றேன்; மா வலான் - குதிரைத்
தொழிலில்வல்லவனான தாமக்கிரந்தி, மற்றை இருவரின்உம் -
மற்றைப்பாண்டவர்களிரண்டுபேரிலும், நகுலன் தான்ஏ - நகுலனாகவேண்டும்;
இன்நிரையின் காவலான் - அழகிய பசுக்கூட்டங்களைக் காத்தல்வல்லவனான
தந்திரிபாலன், இளைய கோஏ - (ஐவருள்) இளையவனாகிய
சகதேவனேயாகவேண்டும்;

     இதனால், மற்றைப்பாண்டவரும் திரௌபதியும் இன்னாரின்னாரென்று
உத்தரன் தெரிவிக்கின்றான்.  நண்பு - நண்பனுக்குப் பண்பாகுபெயர்.  அறம் -
தருமக்கடவுளாகிய யமன்.  'அறமுரைப்போனறத்தின் மகன்' என்றதில்,
தந்தையின் தகுதிக்கு ஏற்றபடி மைந்தனும் அறநெறிதேர்ந்தவ னென்றது
விளங்கும்.  மான்மதம் - கஸ்தூரி யென்னும் மானினது கொழுப்பு;
வடமொழியில் மருகமத மெனப்படும்.  திரௌபதி தன்னைத் துரியோதனன்
துச்சாதனனைக்கொண்டு தலைமயிர் பிடித்திழுத்துச் சபையிற்கொணர்ந்து
துகிலுரிந்தும் தன் மடிமேலுட்காரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது
"துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று வெற்றி முரசறைந்தாலன்றி நான்
விரித்த கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிப்பதில்லை' என்று சபதஞ்செய்து
அங்ஙனமே தலைவிரிகோலமாயிருத்தலால், 'மருமலருமான்மதமுந் துறந்த
கூந்தல் வண்ணமகள் பாஞ்சாலன் மகளே போலும்' என்றான்.  ஆகவேண்டும்,
போலும், அயிர்க்கின்றேன் என்றவை - ஊகித்தற்பொருளன.  'என
அயிர்க்கின்றேன்' என்றதைப் பின்னிரண்டுவாக்கியங்கட்குங் கூட்டுக.

     பாண்டவர் அஜ்ஞாதவாசஞ்செய்கையில், ஆயிரம்மல்லர்சூழப்
பெருமல்லனொருவன் விராடராசசபைக்குவந்து மற்போரில்
தன்னோடொப்பவரெவரு மில்லையென்று செருக்கிப் பேச, அப்பொழுது
அரண்மனையிலுள்ள மல்லரனைவரும் அரசன்கட்டளைப்படி
அம்மகாமல்லனுடன் பொருதுதோற்றனராக, பிறகு கங்கபட்டன்சொன்னபடி
விராடன் வீமனாகிய பலாயனனையேவ, அவன் மற்போர்பொருது
அம்மல்லர்தலைவனை எளிதில் வென்றனனென்ற வரலாறு, கீழ்
மற்போர்ச்சருக்கத்தில் விளக்கப்பட்டது.                           (298)

140.ஆளையேயடுங்களிற்றார்தம்மையாரு மறியாமலிந்நகர்க்க
                              ணடங்கிநின்றார்,
நாளையேவெளிப்படுவர்நெருநலேதந் நாளுள்ளகழிந்