பக்கம் எண் :

210பாரதம்விராட பருவம்

     படைத்தற்கடவுளுக்கும் படைத்தற்கடவுளான பரம்பொருளின்
சேவடியைத் துதிப்போ மென்றவாறு.  அனுபவித்தே தீரவேண்டியிருத்தலால்,
'மிக்கவிதி' என்றது:  இனி, மிக்கவிதியால் - சிறந்தவேதவிதிப்படி யென்றலும்
உண்டு.  செக்கமலம் = செங்கமலம்: வலித்தல்.

     முதற்பதினைந்துகவிகள் - ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும்
பெரும்பாலும் காய்ச்சீர்களுமாகிவந்த அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                          (301)

2.-இரண்டுகவிகள் -மறுநாட்காலையில் தருமன்
திரௌபதியும் தம்பிமாரும் அருகுசூழ்தர,
நிஜவடிவத்தோடிருத்தல் கூறும்.

அருக்கனடிகைதொழு தனந்தரமருக்கன்
உருக்கருகவேயருணவுருவழகெறிப்பத்
திருக்கிளர்நலம்பெறுசெழுந்தெரிவையோடும்
குருக்குலம்விளங்கவருகோமகனிருந்தான்.

      (இ -ள்.) அனந்தரம் - (சூரியனுதித்த) பிறகு, குருக்குலம் விளங்க வரு
கோமகன் - (தன்னால்) குருகுலம் விளக்கத்தையடையுமாறுதோன்றிய
ராஜகுமாரனாகிய தருமன்,- அருக்கன் அடிகைதொழுது - சூரியனுடைய
திருப்பாதங்களை வணங்கி, அருக்கன் உரு கருகஏ அருணம் உரு அழகு
எறிப்ப - சூரியனுடைய செந்நிற வடிவம் (தன்வடிவுக்குமுன்னே)
கருநிறமுடையதாகத்தோன்றும்படி செந்நிறவடிவம் அழகு வீசாநிற்க, திரு கிளர்
நலம் பெறு செழுந்தெரிவையோடுஉம் - அழகுவிளங்குகின்ற நற்குணம் பூண்ட
வளவிய பெண்ணாகிய திரௌபதியுடனே, இருந்தான்-; (எ - று.)

     காலைச்சந்தி யனுஷ்டித்ததை, 'அருக்கனடிகைதொழுது' என்றன
ரென்னலாம்.  "பகலோனுதயப்பொருப்பின் மீண்டான்" என்று கீழ்வந்திருக்க,
'அனந்தரம்' என இங்கு வந்ததனால், சூரியனுதித்தபிறகு என்க.       (302)

3.காற்றின்மகனுங்கடவுளாதிதிருமகனும்
மாற்றமுதிராயுண்மறைவானவர்மகாரும்
ஏற்றமுறையாலடியிறைஞ்சியிசையோடும்
தோற்றமுறுமாறருகுசூழ்தரவிருந்தார்.

      (இ -ள்.) காற்றின் மகன்உம் - வாயுபுத்திரனான வீமசேனனும், கடவுள்
ஆதி திருமகன்உம் - தேவர்கட்குத்தலைவனான இந்திரனுடைய குமாரனான
அருச்சுனனும், மாற்றம் முதிர் - புகழ்ச்சியுரை மிக்க, ஆயுள் மறை -
வைத்தியசாஸ்திரத்திலே வல்ல, வானவர் - அசுவினீதேவர்களின், மகார்உம் -
மக்களான நகுலசகதேவர்களும், ஏற்ற முறையால்-(தாம்தாம்) இருக்கவேண்டிய
முறைப்படியே, அடி இறைஞ்சி-(அந்தத் தருமனுடைய) பாதங்களை
வணங்கிக்கொண்டு, இசையோடுஉம் தோற்றம் உறும் ஆறு - கீர்த்தியுடனே
விளங்குதல்