கான்மகன் விழி சிவந்தான் - சினைவினை முதலொடுஞ் செறிந்தது: [நன்-பொது. 52.] விரை = விரைந்து: வினைப்பகுதி எச்சப்பொருள் தந்தது: "வரிப்புனைபந்து" என்ற இடத்துப்போல. (305) 6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்:தருமன் சினந்த வீமார்ச்சுனரின் வெகுளியை நியாயவுரையால் தணித்தலைக் கூறும். ஒன்றுதவிசெய்யினுமவ்வுதவிமறவாமற் பின்றையவர்செய்பிழைபொறுத்திடுவர்பெரியோர் நன்றிபலவாகவொருநவைபுரிவரேனும் கன்றிடுவதன்றிமுதுகயவர்நினையாரே. |
(இ -ள்) ஒன்று உதவி செய்யின்உம் - (ஒருத்தர்) ஓருதவி செய்தா ரேயாயினும், அ உதவி - அந்தஉபகாரத்தை, மறவாமல் - மறந்திடாமல், பின்றை - பிறகு, அவர் - அந்தஉபகாரஞ்செய்தவர், செய்-செய்த, பிழை- பலகுற்றத்தை, பெரியோர் -, பொறுத்திடுவர்-: முது கயவர் - பழமையான கீழ்மக்கள், நன்றி - (ஒருவர்செய்த) உபகாரம், பல ஆக - மிகப்பலவாயிருக்க, (அந்த உபகாரஞ் செய்தவர்), ஒரு நவை புரிவர் ஏன்உம் - ஒருகுற்றஞ் செய்வாரேயானாலும் (அன்னார்செய்த மிகப்பல நன்மைகளையும் மறந்து அவர்செய்த ஒரு தீமைக்காக), கன்றிடுவது அன்றி - (அவர்மீது) கோபிப்பதே யன்றி, நினையார்-(அவர்செய்த நன்மையை) எண்ணிச் சாந்தமாக இருக்க மாட்டார்; (எ - று.) நீங்கள் கயவர்தன்மையை மேற்கொள்ளாமல் பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன்செய்த பல நன்மைகளையெண்ணி என்நெற்றியில் வடுச்செய்த இந்தஒருதீமையை மறக்கவேணுமென்றபடி: இந்தச்செய்யுளில் பொதுவாகக் கூறி 'நீங்கள் சினம் மாறுதலே செய்யத்தக்கது' என்ற சிறப்புப் பொருளைப் பெறவைத்தது-பிறிதுமொழிதலணியின்பாற்படும்.விராடன் செய்தநன்மை, மேற்செய்யுளிற் பெறப்படும். (306) 7. | அனலுமுதுகானகமகன்றுநெடுநாணம் நினைவுவழுவாமலிவனீழலிலிருந்தோம் சினமிகுதலிற்றவறுசெய்தனனெனப்போய் முனிதல்பழுதாகுமெனமுன்னவன்மொழிந்தான். |
(இ -ள்.) அனலும் - பற்றியெரியுந்தன்மையுள்ள, முது கானகம் - பழமையாகிய காட்டை, அகன்று - விட்டுநீங்கி, நெடு நாள் - (ஒருவருஷத்திற்குச்செல்லவேண்டிய) பல நாள்கள், நம் நினைவு வழுவாமல்- நம் எண்ணம் மாறுபடாமல் [நம்விருப்பின்படி], இவன் நீழலில் இருந்தோம் - இந்தவிராடராசனுடைய குடைநிழலில் தங்கியிருந்தோம்; (அப்படிப் பலநன்மைகளையடைந்த நாம்), சினம் மிகுதலில் தவறு செய்தனன் என போய் முனிதல் - கோபம்முதிர்ந்ததனால் (என் நெற்றியில் வடுவையுண்டாக்குதலாகிய) ஒரு தவற்றைச் செய்தான் என்று (அவன்மீது) போய்க் கோபச்செயலைக் காட்டுதல், |