பக்கம் எண் :

214பாரதம்விராட பருவம்

தவர்,அராவின் முடிமேல் உலகில் - ஆதிசேஷனுடைய சிரசிலே
தங்கியிருக்கின்ற இந்தஉலகத்தில், ஆர்கொல் உளர் - யாவரிருக்கின்றனர்?
என்றான் -; (எ - று.)

     விராடன் தன்பாதங்களில் வீழவே, அதற்குஎதிராகத் தருமன் எழுந்து
அவ்விராடனை மார்புறத் தழுவினான்.                           (309)

10.-தன்னிடத்துவாழ்ந்தபோது நேர்ந்திருக்குங் குறையைப்
பொறுக்குமாறு விராடன் பாண்டவரை வேண்டுதல்.

அறைமுரசுயர்த்தவனை யவனுநனியையா
பொறையுடையவர்க்கலதுபுகழ்புனைதலுண்டோ
இறையமுதநற்குணமிலாதவரிடத்தில்
குறைதிருவுளத்தினிடைகொண்டருளலென்றான்.

      (இ -ள்.) அறை - (குணில்கொண்டு) அடிக்கப்படுகின்ற, முரசு - முரசு
வாத்தியத்தை, உயர்த்தவனை - உயரவெடுத்த கொடியிலே கொண்டவனாகிய
தருமபுத்திரனைநோக்கி, அவன்உம் - அந்த விராடராசனும், 'ஐயா-! பொறை -
பொறுமையை, நனி உடையவர்க்கு அலது - மிகுதியாகக் கொண்டிருப்பவருக்கு
அல்லாமல், (மற்றையோர்க்கு), புகழ் புனைதல் - புகழை யணிவதென்பது,
உண்டு ஓ - உண்டாகுமோ? இறை - சிறிதும், அமுதம் நல் குணம்
இலாதவரிடத்தில் - அமுதம்போன்ற நல்லகுணமில்லாதவரிடத்திலேநேர்ந்த,
குறை - குறையை, திருஉளத்தினிடை - (உனது) திருமனத்திலே, கொண்டருளல்
- கொண்டருளவேண்டா,' என்றான் - என்று வேண்டிக்கொண்டான்; (எ - று.)

     "ஒறுத்தார்க்கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்,
பொன்றுந்துணையும்புகழ்" என்றார், நாயனாரும்.  என்னிடத்துக்குறையைப்
பொறுக்கவேண்டும்என்று நேரேகூறுதற்குக்கூசி, விராடன்,
தன்னைப்படர்க்கையாகவைத்துப்பேசுகின்றான்:  இக்கருத்துப்பற்றியதே இது
என்பது, மேற்கவியில் தருமன்கூறுவதால் விளங்கும்.  மூன்றாமடியில், அறிவு
முதனற்குணமடாதவரிடத்தில்என்றும் பாடம்.                     (310)

11.-தருமன் விராடநகரத்தில்இனிதுறைந்தமை கூறல்.

இந்நகரிலெய்தியபினெத்துயருமெய்தாது
எந்நகரியென்னநெடுநாளினிதிருந்தேம்
செந்நெல்வயலூடுமுதுசேலுகளுநாடா
நின்னிலுமுயர்ந்ததமர்நீயறியவுண்டோ.

மூன்று கவிகள் - ஒருதொடர்

      (இ -ள்.) செந்நெல் வயலூடு - செந்நெல்விளையும் வயலில்,
(நீர்வளத்தால்), முது சேல் உகளும் - பழமையான சேல்மீன்கள் தாவித்
திரியப்பெற்ற, நாடா - மச்சநாட்டை யுடையோனே! இ நகரில் - இந்த
நகரத்திலே, எய்திய பின் - வந்துசேர்ந்தபின்பு, எ