யாக,மொழிந்த போது - சொன்னகாலத்திலே,-விரை துற்று தார்சல்லியன் - நறுமணம் நெருங்கிய மாலையை யணிந்த சல்லிய னென்பான், பிழை கொன்ற - (தன்) குற்றத்தினால் தீங்கிழைத்த, பகடு போல்வான் - ஆண்யானைபோல் பவனாகி, முன்பு விளைந்த எல்லாம் - முன்னே நடந்தஎல்லாவற்றையும், பரசுற்று - சொல்லிவிட்டு, அகன்றான் - அப்பாற்சென்றான்; (எ - று.) தான்முன்னமே யாராய்ந்திருக்க வேண்டியதாகவும் அங்ஙன் செய்யாமையால், சல்லியனை, 'பிழை கொன்ற பகடுபோல்வான்' என்றது: இனி பிழை கொன்ற - அரவக்கொடியோனால் தனக்குமுன்பு நிகழ்ந்ததைத் தெரிவித்தலால் தன் குற்றத்தைப் போக்கிக் கொண்ட, பகடுபோல்பவனான சல்லியன் என்று உரைத்தலும் உண்டு. (325) 26.-சல்லியன்துரியோதனனுக்கே உதவிபுரிபவனாதல். கரடக்கடவெங்களியானைகவனமான்றேர் துரகப்பதாதிப்படைதம்மொடுஞ்சூழ்ச்சியாக விரகிற்புகுந்துநெறியின்கண்விருந்துசெய்த உரகக்கொடியோற்கரும்போரிலுதவிசெய்வான். |
(இ -ள்.) கரடம் - கரடத்திலே, கடம் - மதநீரையுடைய, வெம் - வெம் மையான, களி யானை - மதக்களிப்புள்ள யானையும், கவனம் மான் தேர் - விரைந்துசெல்லும் விலங்காகிய குதிரைபூட்டிய தேரும், துரகம் - குதிரையும், பதாதி - காலாளும் ஆகிய, படைதம்மொடுஉம் - நால்வகைச் சேனைகட்கும், சூழ்ச்சிஆக - (முன்னமே செய்த) ஆலோசனையின்படி, விரகின் - தந்திரமாக, புகுந்து - வந்து, நெறியின்கண் - (தருமனைக்குறித்துத் தான்செல்லும்) வழியிடையே, விருந்து செய்த-, உரகம் கொடியோற்கு - பாம்புக் கொடியையுடையவனாக துரியோதனனுக்கு, அரும் போரில் - மகாயுத்தத்தில், (சல்லியராசன்), உதவிசெய்வான் - துணைபுரிபவனானான்; (எ - று.) கரடம்- யானைக்கவுளினின்றும் மதநீர்பாயுந்துளை: யானையின் கவுளில் மதநீர்பெருகுஞ்சுவடுமாம். சேனைகளுடன் தருமனைநோக்கிச் சல்லியராசன் வாராநிற்கையில் இடைவழியே மிகவும் இளைப்பையடைந்த வேளையில் இன்னார் உதவிபுரிபவரென்றுதெரியாது விருந்துசெய்துவிட்டுப் பின்னர்த் துரியோதனன் செய்தவிருந்து என்று தெரிவித்ததனால், 'விரகிற்புகுந்து நெறியின்கண் விருந்து செய்த உரகக்கொடியோன்' என்றார். படைதம்மொடும் என்பதை உருபுமயக்கமாகக்கொள்ளாமல் 'படைதம்மொடும் புகுந்து' எனக் கூட்டியுரைத்தலும் ஒன்று. (326) 27.-சல்லியன்துரியோதனனுக்கு உதவியாவதைப்பற்றிய கவிக்கூற்று. நஞ்சோடுசாலுமமரின்கணமர்களென்று நெஞ்சோடியைந்த துணையென்றுநினைத்தல்செய்யார் செஞ்சோறுசாலவலிதென்றுமண்செப்பும்வார்த்தை வெஞ்சோரிவேலானிலையிட்டனன்மீண்டுமீண்டும். |
|