(இ -ள்.) (வீரர்),- 'நஞ்சோடு சாலும் - விஷத்தோடு ஒப்பிடத்தக்க [உக்கிரங்கொண்டு கொல்லுந்தன்மையுள்ள], அமரின்கண் - போரிலே, நமர்கள் என்றுஉம் - (இவர்) நம்மைச்சேர்ந்தவ ரென்றும், நெஞ்சோடு இயைந்த துணை என்றுஉம் - மனத்தோடுஒத்த நண்பர் என்றும், நினைத்தல் - எண்ணுவதை, செய்யார்-: (அவ்வீரர்கட்கு), செம் சோறு - செவ்வியசோறு [தக்ககாலத்தி லளிக்கும் உணவே], சால வலிது - மிக்கவலிமையை யுடையது', என்று-, இ மண் - இவ்வுலகத்தவர், செப்பும் - சொல்லுகின்ற, வார்த்தை - வார்த்தையை, வெம் சோரி வேலான் - கொடிய இரத்தம் படியப்பெற்ற வேற்படையை யுடையவனாகிய சல்லியன், மீண்டுஉம் - மறுபடியும், ஈண்டு - இப்போது, நிலையிட்டனன் - நிலைப்படுத்தினன்; மாமனும் தக்கதுணைவனுமாக இருந்தும், சல்லியன், பாண்டவர்க்குப் போர்த்துணையாகாது வழியிடையே இளைப்புக்காலத்திற் சோறிட்ட காரணத்தால் துரியோதனனுக்கே போர்த்துணைவனாவதால், 'வீரர்க்கு நமர்துணையென்பது வேண்டா: செஞ்சோறே வலிது' என்று உலகத்தார் சொல்லும்வார்த்தையை இப்போது மீண்டும் நிலையிட்டவனாவன். (327) 28.-விராடராசன்உத்தரையைஅபிமனுக்கு மணஞ்செய்வித்தல். ஓமஞ்செய்தீயிற்பொரிசிந்தலினுற்றவாசத் தூமங்கமழப்பலவாசத்தொடையல்சூட்டிக் காமன்றிருமைத்துனற்கன்பொடக்கன்னிதன்னை மாமன்றலங்கேபுரிவித்தனன்மச்சர்கோமான். |
(இ -ள்.) ஓமம் செய் - ஓமஞ்செய்யப்படுகின்ற, தீயின் - அக்கினியிலே, பொரி சிந்தலின் - பொரியைச் சிந்துவதனால், [லாஜஹோமஞ் செய்வதனால்], உற்ற - பொருந்திய, வாசம் - வாசனைகொண்ட, தூமம் - புகை, கமழ - எங்கும் நறுமணம்வீசாநிற்க,- காமன் திருமைத்துனற்கு - காமனுடைய அவதாரமான பிரத்யும்நனுக்கு மைத்துனனான அபிமந்யுவுக்கு, அ கன்னி தன்னை - அந்த உத்தரையென்ற கன்னிகையை, வாசம் பல தொடையல் சூட்டி நறுமணமுள்ள பலமலர்மாலைகளையணிவித்து, அன்பொடு - அன்புடனே, மா மன்றல் - சிறந்த விவாகத்தை, அங்கே - அவ்விடத்தில், மச்சர் கோமான் - விராடன், புரிவித்தனன்-; (எ - று.) ஸ்ரீக்ருஷ்ணனுக்கு உடன்பிறந்தவளாகிய சுபத்திரைக்கு மைந்தனான அபிமந்யு அந்தக்ருஷ்ணன்மகனான ப்ரத்யும்நனுக்கு அத்தை மைந்தனாவ னாதலால், அவனை, 'காமன்திருமைத்துனன்' என்றார். தூமம்புடைசூழ்புவி வேந்தர் தொடையல்சூழ என்றும் பாடம். (328) 29.-பாண்டவர்காளிக்குப் பலிகொடுத்து முன்வன்னிமரத்துவைத்த படைக்கலங்களைமீட்டுங்கொள்ளுதல். முன்னிச்சமருக்கொருப்பட்டமுடிமகீபர் கன்னிக்குவேண்டுங்கடனானபலிகணல்கி |
|