பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 23

வழங்கி-தந்து, '(நீர்), எந்த நகரீர்-எந்தநகரத்தீர்? “யாம் உணர உரைமின்-
நாங்கள் அறியும்படி சொல்லுங்கள்,' என்றாள் - என்று வினவினாள்; (எ - று.)

     எளியவள் போன்று வந்தவளையும் விராடன் மனைவி
உபசரித்தனளென்றமையால், அவளது தருக்கின்மைமுதலிய நற்பண்புகள்
வெளியாம்.                                                   (31)

32.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வந்தவள் தன்னை
இன்னாளென்று தெரிவித்து, 'தான் வந்த நோக்கத்தையும்
தெரிவித்தல்.

தான்விரதமாயைபுரிசகுனிபொருசூதால்
கான்விரதமாகவுறைகாவலர்கள்கோயில்
மான்விரதநோக்கியர்மருங்குறவிருந்தேன்
யான்விரதசாரிணியெனும்பெயரினாளே
.

     (இ-ள்.) தான்-சுயமாக, விரதம் மாயை புரி-விரஸமான [திருப்தி
விளைக்காது வெறுப்பைவிளைக்கிற] வஞ்சனையைச் செய்கின்ற, சகுனி-
சகுனியென்பான், பொரு-ஆடின, சூதால் - சூதாட்டத்தால், கான் விரதம் ஆக
உறை-காட்டில் வசித்தலை விரதமாகக் கொண்டு வாழ்ந்த, காவலர்கள் -
அரசர்களாகிய பாண்டவர்களின், கோயில் - அரண்மனையிலே, மான் விரதம்
நோக்கியர்-மான்கள் (தோற்று) ஒழிவதற்குக்காரணமான கண்ணழகையுடைய
(அப்பாண்டவரின்) இராணிமாரின், மருங்கு-சமீபத்திலே, உற-பொருந்த,
இருந்தேன்-: யான்-,-விரதசாரிணி எனும் பெயரினாள் - விரதசாரிணியென்ற
பேரையுடையேன்; (எ - று.) விரதசாரணியென்று பிரதிபேதம்.

     இந்தச்செய்யுளில் திரிபு என்னும் சொல்லணி காண்க.  விரதம் என்பது
முதலடியில் விரஸமென்ற வடசொல்லின் திரிபும், இரண்டாமடியில் வ்ரதமென்ற
வடசொல்லின் திரிபும் ஆம்: மூன்றாமடியில் விரதம் என்பது-ஒழிந்திடுகை
யென்ற பொருளுள்ள வடசொல்.  “யான் விரதசாரிணி யெனம் பெயரினாள்-
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. வ்ரதசாரிணீ என்ற வடசொல்-
வ்ரதத்துடன் நடப்பவள் என்று பொருள்படும்.                     (32)

33.பூசுவனசுற்றுவனபூண்பனமுடிப்ப
தேசொடுவனப்புநனிதிகழும்வகையணிவேன்
வாசவனொடொத்தமனுகுலவரசன்மனைவி
ஏசறவுனக்கெலுவையாகுவதெனெண்ணம்
,

     (இ-ள்.) பூசுவன - (உடம்பிற்) பூசுதற்கு உரிய கலவைச்சாந்து
முதலியனவும், சுற்றுவன - சுற்றிக்கட்டவேண்டிய மாலை முதலியனவும்,
பூண்பன - பூணுதற்கு உரிய ஆடையணிகலன்களும், முடிப்ப -
முடிக்கவேண்டிய கூந்தல்தார் முதலியனவும், தேசொடு வனப்பு நனி திகழும்
வகை-ஒளியோடு அழகும் மிகவும் விளங்கும்படி, அணிவேன்-அலங்காரமுறச்
செய்வேன்; வாசவனொடு ஒத்த மனுகுலம் அரசன் மனைவி -
இந்திரனோடொத்தவனும் மனுகுலத்துத் தோன்றியவனு