மானவிராடராசனுடைய மனைவியே! உனக்கு-, ஏசுஅற - குற்றமில்லாமல், எலுவை ஆகுவது - தோழியாக அமையவேண்டு மென்பது, என் எண்ணம் - என்கருத்தாம்; (எ - று.) (33) 34. | எந்தைமனையிற்பயிலிளம்பருவநாளில் கந்தருவர்காவல்புரிகற்புடையளானேன் இந்துநுதலாய்மனிதர்யார்முகமுநோக்கேன் வந்தனெனின்மாளிகையின்வைகும்வகையென்றாள். |
(இ -ள்.) எந்தை மனையில்-எந் தந்தையினுடைய வீட்டில், பயில்- வாழ்ந்த, இளம்பருவம் நாளில்-இளம்பருவத்தினத்தில் (தொடங்கி), கந்தருவர் காவல் புரி - கந்தருவர் (யாதொருதீங்கும் வராமற்) காவல் செய்கின்ற, கற்பு உடையள் ஆனேன் - கற்பையுடையவளானேன்; இந்து நுதலாய் - சந்திரன் போன்ற முகத்தையுடையவளே! மனிதர் யார் முகம்உம் நோக்கேன் - எந்த மனிதருடையமுகத்தையும் கண்ணெடுத்துப் பாரேன்: நின் மாளிகையின் வைகும் வகை - உன்வீட்டிலே தங்கிவாழும்படி, வந்தனென் - (இப்போது) வந்துள்ளேன், என்றாள்-என்று கூறினாள், (அந்த வண்ணமகள்); (எ - று.) கீழிரண்டுகவிகளால், தான் இன்னாளென்பதையும், தனக்குத் தெரிந்த தொழிலையும், தான் அங்குவந்ததன் நோக்கத்தையும் தெரிவித்தவள், இந்தச் செய்யுளினால், தான் வலியோராற் பாதுகாக்கப்படும் கற்புடையளென்பதைக் கூறுகிறாள். 'உனக்குஎலுவையாளுவதெனெண்ணம்' என்று கீழ்க்கவியிற் கூறியதனால், 'நின்மாளிகையின் வைகும்வகை வந்தனென்' என்று இங்குக் கூறியது-அனுவாதமென்க: நான் உன்மாளிகையில் வண்ணமகளாக வாழ்வேனென்றாலும், என்கற்பிற்கு இழுக்கமுண்டாக்க எவராலும் ஆகாதென்று கூறியவாறு. (34) 35.-வண்ணமகள்கூறியதுகேட்டுச்சுதேஷ்ணை தன்னிடத்து வண்ணமகளாகஇருக்குமாறு பணித்தல். வண்ணமகள்கூறியவைமகிழ்வினொடுகேட்டுத் துண்ணெனவெரீஇயினள்சுதேட்டிணைவிரும்பி விண்ணவர்கள்பாவையரின்மேவுதியெனக்குக் கண்ணிணையுநீயுனதுகாவலெனதுயிரும். |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) துண்ணென வெரீஇயினள் - (வந்தவளைக்கண்டதும்) திடுக்கிட்டு அஞ்சினவளான, சுதேட்டிணை -, -வண்ணமகள்-, கூறியவை- சொன்னவற்றை, மகிழ்வினொடு கேட்டு - மகிழ்ச்சியோடு செவியேற்று, விரும்பி-(அவளிடத்து) அன்புபாராட்டி, (அவளைநோக்கி) '(நீ), விண்ணவர்கள் பாவையரின்-தேவமாதர்போல், மேவுதி-இனிது தங்கியிருப்பாய்: எனக்கு கண்இணைஉம்நீ - நீ எனக்கு இரண்டுகண்களையும் போல்வாய்: எனது உயிர்உம்-என்பிராணனும், உனது காவல் - உன்காவற்கு (உட்பட்டது); (எ-று.) |