பக்கம் எண் :

28பாரதம்விராட பருவம்

மல்லினுக்குஇந்துஎன்ன என்பதற்கு - இரவில் வானத்துத் தோன்றும் பல
சோதிகளுள் சந்திரன்போல என்று உரைத்து, அத்தொடரையும்
போர்மல்லினுக்கு ஒருவன்யானே என்பதனோடு எட்டுவாரு முளர்.

     இச்சருக்கத்திலுள்ள பதினான்குகவிகளும் - பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவைமாச்சீர்களுமாகி வந்த
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.                         (39)

2.-அந்த மல்லனது வருணனை.

அண்டமாமுகடோடொத்தசென்னியனவனிமுற்றும்
கொண்டமாமேருவொத்தகுங்குமக்கடகத்தோளான்
சண்டமாருதத்தோடொத்தவலியினன்றந்தியெட்டின்
கண்டமார்முகத்தினீண்டகையெனத்திரண்டகாலான்.

     (இ-ள்.) (அந்தமல்லன்),-அண்டம் மா முகடோடு ஒத்த-அண்டத்தின்
பெரிய மேலிடத்தையொத்த [ஓங்கிய], சென்னியன் - தலையையுடையவன்:
அவனி முற்றுஉம்-பூமிமுழுவதையும், கொண்ட - தாங்கிக்கொண்டுள்ள, மா
மேருஒத்த-சிறந்த மேருமலைபோன்ற, குங்குமம் கடகம் தோளான் -
குங்குமச்சேறுபூசிய கடகமென்ற தோள்களையையணிந்த தோளையுடையவன்:
சண்டமாருதத்தோடு ஒத்த - கொடுங்காற்றோடு ஒப்பிடத்தக்க, வலியினன்-
பலத்தையுடையவன்: தந்தி எட்டின் - அஷ்டதிக்கஜங்களின், கண்டம் ஆர்
முகத்தின் - கழுத்தையொட்டியுள்ள முகத்தினின்று, நீண்ட - நீண்டுள்ள,
கையினை-துதிக்கைபோல, திரண்ட - திரண்டுள்ள, காலான் -
கால்களையுடையவன்; (எ - று.)

     மேருமலை பூமியினிடையேயிருந்து அதனைத் தாங்குவ தென்ற
நூற்கொள்கைபற்றி, 'அவனிமுற்றுங் கொண்ட மாமேரு' எனப்பட்டது.  தந்தி-
தந்தத்தையுடையது என யானைக்குக் காரணவிடுகுறி.  தந்தி எட்டு-கிழக்கு
முதலிய திக்குக்களிலிருக்கும் ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்ஜநம் புஷ்பதந்தம் ஸார்வபௌமம் ஸு ப்ரதீகம் என்ற தெய்வயானைகள்.
தந்திக்கையை யுவமமாகக் கூறியதனால், இங்கு 'கால் என்றது - அரைக்குக்
கீழ்பட்டுத் துடைமுதற் கொண்டுள்ள பகுதியைக் காட்டும்.          (40)

3.-அந்தமல்லன் பலமல்லர்தன்னைச் சூழ்ந்துவர,
விராடனவைக்களத்தை யடைதல்.

ஆயிரமல்லர்தன்னையணிநிழலென்னச்சூழப்
பாயிரும்புரவித்திண்டேர்மிசைவரும்பரிதிபோல
மாயிருஞாலந்தன்னின்மற்றிவற்கெதிரின்றென்னச்
சேயிருந்தடக்கைவேந்தன்றிருந்தவையதனைச்சேர்ந்தான்.

      (இ -ள்.) ஆயிரம் மல்லர்-பலமல்லர்கள், தன்னை-, அணி நிழல்
என்னஅழகிய நிழலைப்போல, சூழ-சூழ்ந்துவர,-பாய் இரு புரவி