பக்கம் எண் :

30பாரதம்விராட பருவம்

5.-மற்றொழிலில்வல்லவர்அநேகர் அந்த மல்லனுடன்
தனித்தனி பொருதல்.

அந்தமற்றொழிலின்மிக்கோரநேகர்நீடசனியொப்பார்
வந்தமற்றலைவன்றன்னைவருதிநீயெம்மொடென்று
முந்தமற்கலைநூல்சொன்னமுறைமையினரசன்காணச்
சந்தமற்சமரஞ்செய்தார்தனித்தனியொருவராக.

      (இ -ள்.) அந்த மல் தொழிலில் - (வந்த மல்லவீரன் வல்லமை
பெற்றுள்ள) அந்த மற்போர்த் தொழிலிலே, மிக்கோர் - மிகவல்லவரான,
அநேகர்-, நீடு அசனி ஒப்பார்-பேரிடியை யொப்பவராய்
(க்கர்ச்சித்துக்கொண்டு), வந்த-, மல் 'தலைவன் தன்னை - மல்லர் தலைவனை,
'எம்மொடு - எம்முடனே, நீ-, வருதி-(மற்போர்செய்ய) வருவாய், 'என்று-என்று
அறைகூவி,-அரசன் காண - விராட மன்னவன் கண்டுகொண்டிருக்க, முந்த -
விரைவாக, மல்கலை நூல்சொன்ன முறைமையின் -
மற்போர்த்தொழிலைப்பற்றிய சாஸ்திரஞ்சொன்ன முறைமையினால், சந்தம் மல்
சமரம் - அழகிய மற்போரை, தனித் தனி ஒருவர் ஆக - தனித்தனியே
ஒவ்வொருவராக, செய்தார்-; (எ - று.)

      கலை -சாஸ்த்ரம். போர்க்கு வரும்போது பெருமுழக்கஞ்செய்து
கொண்டு வருவதனால், அசனியை யொப்பார் என்றது.             (43)

6.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:அரசனிடத்திருந்த மல்லர் வந்தமல்லனோடு தனித்தனிபொருதுதோற்க,அரசன்வந்தவனை 
விசேஷமாகச் சம்மானித்தலைக்கூறும்.

தத்தியுந்தோளுந்தோளுந்தாக்கியுஞ்சென்னிகொண்டு
மொத்தியும்பற்பல்சாரிமுடுகியும்வயிரக்கையால்
குத்தியுங்காலுங்காலுங்கோத்துமற்கூறுதோன்ற
ஒத்தியும்பாறையென்னவுரனுடனுரங்கள்சேர்த்தும்.

      (இ -ள்.) தத்திஉம் - தாவியும், தோள்உம் தோள்உம் தாக்கி உம்-
தோளுடன் தோள் பொருந்த மோதியும், சென்னி கொண்டு மொத்திஉம் -
தலையைக்கொண்டு இடித்தும், பல் பல் சாரி முடுகிஉம் - பலபல சாரிகளால்
விரைந்தும், வயிரம் கையால் குத்திஉம் - வயிரம்போலுறுதியான
கைம்முஷ்டிகளாற் குத்தியும், கால்உம் கால்உம் கோத்துஉம் - காலுடன் கால்
சேரப்பின்னியும், மல் கூறுதோன்ற - மற்போரின் கூறுபாடு புலப்பட, ஒத்திஉம்-
சிறிதுபின்னிடைந்தும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்துஉம் - பாறை
ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதுபோல  மார்போடு  மார்பைச்    சேர்த்தும்,-
(எ -று.)-'ஆரம ருடற்றி' என அடுத்த கவியோடு இயையும்.

     'ஓரொருமல்லராக ஆரமருடற்றி' என மேல் வருவதனால்,
'உரனுடனுரத்தைச் சேர்த்தும்' என்று பாடமிருப்பின் நலம்.  சாரி -