பக்கம் எண் :

32பாரதம்விராட பருவம்

லேன் என்றுகர்ச்சித்தான்.  அப்போது மற்றைமல்லர்களெல்லாம் அஞ்சி
நடுங்கி நிற்பதுகண்டு விராடராசன் 'இந்தமல்லனோடு பொரவல்லார் யர்ா?'
என்றுவினாவ, அச்சத்தினால் எல்லா மல்லரும் வாய்திறவாது இருந்தனர்.
விராடராசன் வெகுண்டு 'நான் இந்த மல்லர்களுக்கு விட்டிருக்கும்
கிராமங்களையும் சம்பளங்களையும் பறித்துக்கொண்டு விடுகிறேன்' என்றான்:
அப்போது அருகேயிருந்த அங்கனென்ற யுதிஷ்டிரன் 'யுதிஷ்டிரனிடத்துக்
கண்ட ஒருமல்லனுண்டு: அவன் நமது அரண்மனையில் மடைப்
பள்ளிவேலையிலிருக்கிறான்: அவன் இவனோடு பொரவல்லான்' என்றான்:
என்னவும், விராடன் 'இந்தமல்லனோடு பொர அவனை விரைவாக அழைமின்'
என்றான் என்று முதனூலி லுள்ளது.                                (46)

9.-பலாயனனென்று மறுபேருள்ளவீமன் மற்போர்க்குச்
சித்தனாகஅங்கு வருதல்.

பைம்பொன்மாமேருவெற்பின்பராரையைச்சோதிநேமி
விம்பமாய்வளைந்ததென்னவிளங்குபொற்கச்சைச்சேர்த்தித்
தம்பமாமென்னத்தக்கதண்டொடுதரணிவீழா
உம்பராரமுதமுண்டவுரவினான்விரைவின்வந்தான்,

      (இ -ள்.) தரணி வீழா உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான்-
பூமியிற்கிடைக்காத தேவர்களின் அரியஅமிருதத்தை யுண்ட
வலிமைபடைத்தவனானவீமன்,-பைம் பொன் மா மேரு வெற்பின் ஒரு
அரையை - பசும்பொன்மயமானபெரிய மேருமலையின் பருத்த அரையை,
சோதி நேமி-ஒளி மயமான சக்கரம்,விம்பம்ஆய் வளைந்தது என்ன -
வட்டமாக வளைந்துகொண்டுள்ளதுஎன்னுமாறு, விளங்கு-விளங்குகின்ற, பொன்
கச்சை-பொற்கச்சையை, சேர்த்தி-இடையிற்) கட்டிக்கொண்டு,-தம்பம் ஆம்
என்ன தக்க - தம்பமோ என்றுகருதும்படியுள்ள,  தண்டொடு -
தண்டாயுதத்துடனே,  விரைவின்   வந்தான்-; (எ - று.)

 வீமனதுஇடையிற் பொற்கச்சை விளங்குவது, மேருவின்பராரையில் நேமி
வட்டமாச் சூழ்ந்தது போலும்; தற்குறிப்பேற்றம். சோதி நேமி-
சூரியனென்பாரு முளர்.  தரணி வீழா - கங்கைநீர்ப் பெருக்கில் வீழ்ந்து,
(பாதாளஞ்சென்று), உம்பராரமுதம்உண்ட என்று கூறலுமாம்: இச்சரித்திரம்
வாரணாவதச்சருக்கத்திற் கூறப்பட்டுள்ளது.  கச்சை - அரையாடை
யவிழ்ந்திடாதபடி கெட்டியாக இருப்பதற்கு இடையிற் கட்டுவது, பருமை +
அரை = பராரை : பண்புப்பெயர் ஈறுபோய், வருமொழி முதல்நீண்டு
நிலைமொழியீறுகெட்டது:   "ஈறுபோதல்... இனையவும்   பண்பிற்கியல்பே"
[நன். பத. 9.]                                             (47)

10.-இரண்டுகவிகள்-பலாயனனும்முன்னர்வெற்றி பெற்றிருந்த
மல்லவீரனும் பொருதலைத் தெரிவிக்கும்.

கதையுடைக்காளைவந்துகடுந்திறன்மல்லன்றன்னோடு
உதயமோடத்தமென்னுமோங்கலோரிரண்டுசேர்ந்து