பக்கம் எண் :

மற்போர்ச் சருக்கம் 33

துதைவுறப்பொருவதேபோற்றோள்புடைத்துருமினார்த்துப்
பதயுகத்தாலுந்தத்தம்பாணிகளாலுஞ்சேர்ந்தார்.

      (இ -ள்.) கதை உடை - கதாயுதத்தையுடைய, காளை - இளவீரனான
பலாயனன், கடுந்திறல் மல்லன் தன்னோடு-கொடிய திறமையையுடைய
மல்லனோடு, வந்து-வந்து சேர்ந்ததனால், (அவ்விருவரும்), உதயமோடு அத்தம்
என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து-உதயமலையோடு அத்தமலை
யெனப்படும் ஓரிரண்டுமலையும் ஒன்றுசேர்ந்து, துதைவு உற -
நெருங்குதல்பொருந்த, பொருவதுஏ போல் - போர் செய்வதுபோல, தோள்
புடைத்து - (தம்தோள்களைத்) தட்டியும், உருமின் ஆர்த்து - இடிபோலக்
கர்ச்சித்தும், பதம் யுகத்தால்உம் - இரண்டுபாதங்களாலும், தத்தம் பாணிகளால்
உம் - தங்கள் தங்களுடைய கைகளாலும், சேர்ந்தார் - நெருங்கிப்
பொருதார்கள்; (எ - று.)                                    

     பொருவதே போற் சேர்ந்தார் என இயையும்.               (48)

11. உதைத்தனர்வீசிவன்போடுரங்கொடுகரங்களெற்றிப்
புதைத்தனர்விரல்கண்மெய்யிற்புருவமுமூக்கும்வாயிற்
சிதைத்தனர்புயங்களென்னுஞ்சிலம்புகடாக்கத்தாக்கப்
பதைத்தனரோடியோடிப்பற்றினர்மீளமீள.
  
   
(இ - ள்.)(ஒருவரை யொருவர்),- வன்போடு - வலிமையோடு, வீசி
உதைத்தனர்-: உரம்கொடு - வலிமையோடு, கரங்கள் எற்றி - கைகளால்
மோதி, விரல்கள் மெய்யில் புதைத்தனர் - விரலின்வடு  உடம்பிலே
புதையும்படி செய்தார்கள்; புருவம்உம் மூக்குஉம்-புருவங்களையும்
மூக்குகளையும், வாயில் - வாயோடு, சிதைத்தனர் - பழுது படச்செய்தனர்:
புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க - (மாற்றானுடைய)
தோள்களென்கிற மலைகள் மோதுவதனால், பதைத்தனர் - (வலிதாங்க
மாட்டாமல்) துடித்து, ஓடி ஓடி - ஓடி யோடிப்போய், மீள மீள பற்றினர் -
மீண்டும் மீண்டும் (ஒருவரையொருவர் மற்போர் புரியுமாறு) பற்றிக்
கொண்டார்கள்; (எ - று.)   

     புருவமும் மூக்கும் வாயிற் சிதைத்தனர் என்பதற்கு - புருவத்தையும்
மூக்கையும் வாய்ப்புறத்திலாகும்படி யழித்தன ரெனினுமாம்.        (49)

12.-வீமன் வந்த மல்லனையழித்தல்.

கற்றனகாயமெல்லாங்கண்டுகண்களிக்கக்காட்டி
உற்றனர்நின்றபோதிலூதையின்புதல்வனூரு
மற்றவன்மருங்குபற்றவன்கரமிடறுபற்றச்
செற்றனனிடிம்பன்றன்னைச்செற்றவெங்கொற்றத்தோளான்.

     (இ -ள்.) கற்றன - (தாம்) அறிந்துள்ளனவான, காயம் எல்லாம்-
இலக்குக்களை யெல்லாம், கண்கண்டு களிக்க காட்டி - (பார்ப்பவர்)