பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 37

யோடு,மீடலும்-மீளாநிற்கையில்,-அம்பரத்தவர் கற்பகம் கா நிகர் அந்த
அந்தப்புரத்து அகல் காவினில்-தேவலோகத்தவரின் கற்பகச்
சோலையையொத்த அந்த அந்தப்புரத்தைச்சார்ந்த அகன்றுள்ள சோலையிலே,
மெல் மலர் கொய்து-மெல்லிய மலர்களைப் பறித்துக் கொண்டு, வெம் புகர்
களிறு ஐவர்தம் தேவி ஆம் விரதசாரிணி - விரும்பத்தக்க
முகப்புள்ளிகளையுடைய ஆண்யானை போன்றவரான பஞ்சபாண்டவரின்
மனைவியாகிய விரதசாரிணியென்கிற, இளங்கொம்பொடுஒத்து-
இளங்கொம்புபோன்று, இடை சோர பணைத்த - இடுப்பானது ஒல்கிநிற்குமாறு
பருத்துள்ள, பொன் கொங்கையாள் - அழகிய ஸ்தநங்களையுடையவள், இவன்
முன்னல்-இந்தக்கீசகனுடைய முன்னிலையிலே, குறுகினாள்-நெருங்கினாள்;
                                                       (எ -று.)

     தமக்கையைப்பணிந்துவிட்டுக் கீசகன் மீள்கையில், அந்தப்புரத்துச்
சோலையில் பூப்பறித்துக்கொண்டுமீண்ட விரதசாரிணியென்ற திரௌபதிக்கு
அவன் முன்னர்வருமாறு நேர்ந்ததென்க.  அந்தப்புரம்-ராஜஸ்திரீகள்
வசிக்குமிடம்.                                              (54)

3.-கீசகன் திரௌபதியைக்கண்டதும் அவள்மீது
மோகங்கொள்ளுதல்.

இயற்கையானகவினுடைப்பாவையையிறைவன்றேவிக்கிளையவன்
                                        கண்டனன்,
செயற்கையாநலன்கண்டிலன்யார்கொலித் தெரிவையென்
றுதன்
                               சிந்தையினோக்கினான்,
மயற்கையாலழிந்தானைம்புலன்களும் வழக
்கொழிந்து
                               மதிமருண்டானிணைக்,
கயற்கையானக்கயற்றடங்கண்ணியைக்கண்டகாட்சியிற்
                                     காமுகனாகியே.

      (இ -ள்.) இணை கயல் கையான்-இரட்டைக்கயல்மீன் இரேகையைக்
கையிலே யுடையவனாகிய, இறைவன் தேவிக்கு இளையவன் -
விராடராசனுடைய மனைவிக்குத் தம்பியாகிய கீசகன்,- செய்றகை ஆம் நலன்-
(ஆடைஆபரணம் முதலியவற்றால் தோன்றும்) செயற்கையான அழகை,
கண்டிலன்-காணாதவனாகி,-இயற்கை ஆன கவின் உடை பாவையை -
இயற்கையழகை யுடையவளான திரௌபதியை, கண்டனன்-கண்டான்: அ கயல்
தடங்கண்ணியை - கயல்மீன்போன்ற விசாலமான கண்களையுடையவளான
அந்தவிரதசாரிணியை, கண்ட - (அங்ஙனம்) பார்த்த, காட்சியில் -
காட்சிமாத்திரத்திலேயே, காமுகன் ஆகி-, இ தெரிவை யார்கொல் என்று தன்
சிந்தையின் நோக்கினான்-'இந்தமாது யாவளோ?' என்று தன் மனத்திலே நாடி,-
மயற்கையால் - காமமோகத்தினால், அழிந்தான் - மனமழிந்து,
ஐம்புலன்கள்உம் வழக்கு ஒழிந்து - (ஐம்பொறிகளும்) ஐம்புலன்களின்மேற்
செல்லுதல் நீங்கி, மதி மருண்டான் - புத்தியில் மயக்கங்கொண்டான்; (எ - று.)

     மகாவீர னானதால், உத்தமலட்சணமான இணைக்கயலிரேகை கீசகன்
கையி லமைந்தது.                                              (55)