பக்கம் எண் :

38பாரதம்விராட பருவம்

4.-கீசகன் திரௌபதியின்கட்டழகைக் கண்டு ஐயுறுதல்.

இந்திரன்னகர்ப்பாவைகொலோமடலேந்துபங்கயத்தேவி
                                        கொலோவியற்,
சந்தமாருந்தடவரைத்தையலோ தாரணிக்குள் வருந்தனித்
                                          தெய்வமோ,
முந்தராவுறைபாதலந்தன்னில்வாழ் மோகினிக்குயிலோ
                                        முரல்கின்றிடு,
முந்துநீரரமங்கைகொலோவெழி லோவியத்தொளியோ
                                     வெனவுன்னினான்.

      (இ -ள்.) இந்திரன் நகர் பாவை கொல்ஓ - தேவலோகத்தில் வாழும்
அமரமடந்தையோ? மடல் ஏந்து பங்கயம் தேவி கொல்ஓ-இதழ்கள் பொருந்திய
தாமரைமலரில் வாழும் இலக்குமியோ? இயல் சந்தம் ஆரும் தட வரை
தையல்ஓ-இயற்கையான அழகு பொருந்திய பெரியமலையின் புத்திரியான
பார்வதியோ? தாரணிக்குள் வரும் தனி தெய்வம்ஓ-பூமியிலேவந்து
மானிடப்பிறவியில்தோன்றிய ஒப்பற்ற பெண் தெய்வமோ? முந்து அரா உறை
பாதலந்தன்னில் வாழ் மோகினி குயில்ஓ - முற்பட்ட [சிறந்த]
பாம்புகள்வசிக்கும் பாதாள லோகத்திலே வாழ்கின்ற
மோகினித்தெய்வத்தினமிசமான பெண்ணோ? முரல்கின்றிடு முந்துநீர்
அரமங்கைகொல்ஓ - ஒலிசெய்த வண்ணம் பெருகுகின்ற நீரில் வாழும்
அரமகளோ? எழில் ஓவியத்து ஒளிஓ-அழகிய சித்திரப் பதுமையின்
ஒளிமயமான வடிவோ? என - என்று (துணிவு பிறவாமல்), உன்னினான் - (பல
படியாக அந்தத் திரௌபதியைக் குறித்து) எண்ணினான், (அந்தக்கீசகன்);
                                                    (எ -று.)

     இலக்குமியைக்கூறியபின் 'வரைமகள்' என வந்ததனால் பார்வதியோ
என்று கூறப்பட்டது.  கொலோஎன்று வந்த இடங்களில் இரண்டில் ஒன்று
அசையென்க.  பாவை, குயில், ஒளிஎன்பன - ஆகுபெயர்கள்.       (56)

5.-கீசகன் அவளைஅருகிருந்தாரால் இன்னாளென அறிந்து,
அவள்காலில்விழுந்து காதலாற் பல கூறுதல்.

அருகுநின்றமகளிரைமற்றிவளார்கொலென்னவறியான்
                                        வினவினான்,
வரிநெடுங்கண்மகளிருமாதரார் வண்ணமாமகளென்றனர்
                                         மையலால்,
உருகுகின்றவக்காளையுநாணமுற் றொடுங்கிநின்றவுயர்
                                    தவப்பாவைதன்,
இருபதங்களில்வீழ்ந்தெனதாவிநீ யென்றுமீளவுமெத்தனை
                                        கூறினான்.

      (இ -ள்.) அறியான் - (அந்தத்திரௌபதியை இன்னாளென்று)
அறியாதவனான கீசகன், மற்று-பின்பு, அருகுநின்ற - (அங்குச்)
சமீபத்திலேயிருந்த, மகளிரை - மாதராரைநோக்கி, 'இவள் ஆர்கொல்-?' என்ன
- என்று, வினவினான்-விசாரித்தான்; வரி நெடுங்கண் மகளிர்உம்-
செவ்வரிபரந்த நெடியகண்களையுடையரான (வினாவப்பட்ட) மகளிர்களும்,
மாதரார் வண்ணமாமகள் என்றனர் - (இவள்) மாதரசியான சுதேஷ்ணைக்கு
அலங்காரஞ்செய்யும் சிறந்த மகள் என்று தெரிவித்தனர்: மையலால்
உருகுகின்ற அ காளைஉம் - காமமயக்கத்தால் மனமுருகுகின்ற அந்த
இளவெருதுபோன்றவனான