4.-இரண்டுகவிகள் ஒருதொடர்:விராடநகரமே அஜ்ஞாதவாசஞ் செய்வதற்கு ஏற்றதென்று அருச்சுனன் தெரிவித்தமை கூறும். நீதியும்விளைவுந்தருமமுநிறைந்துநிதிகண்மற்றியாவையுநெருங்கி ஆதியின்மனுநூல்வழியினிற்புரப்பானவனியைமனுகுலத்தரசன் மாதிரமுழுதுமவன்பெரும்புகழேவழங்குவதமரரும்வேள்வி வேதியர்பலருமுறைவதுமவணேவிராடர்கோன்மச்சநாடையா. |
(இ -ள்.) நீதிஉம் - முறைமையும், விளைவுஉம்-, தருமம் உம்-தானமும், நிறைந்து-, நிதிகள்-செல்வங்களும், மற்றுயாவைஉம்-மற்றுமுள்ள தானியம் முதலானவைகளும், நெருங்கி-, அமரர்உம்-தேவர்களும், வேள்வி வேதியர் பலர்உம்-யாகஞ்செய்கின்ற பிராமணர்கள் பலரும், உறைவதுஉம்-வசிப்பதும். அவண்ஏ - அவ்விடத்திலேயே: (அது),-ஐயா-! விராடர்கோன் மச்சநாடு - விராடராஜனுடைய மச்சதேசமாகும்; அவனியை - அந்தப்பூமியை, ஆதியின் மனுநூல் வழியினில் - முற்காலத்தினின்று வருகின்ற மனுநூலின் வழியினால், புரப்பான்-பாதுகாப்பவன், மனுகுலத்து அரசன் - மனுகுலத்துத் தோன்றிய அரசன்: அவன் பெரும் புகழ்ஏ - அந்த விராடராஜனுடைய பெருங்கீர்த்தியே, மாதிரம் முழுதும் வழங்குவது - திக்குக்களில் எங்குஞ்சொல்லப்படுவதாகும்; (எ - று.) நெருங்கிஉறைவது என இயையும்: இனி, நெருங்கியென்பதை எச்சத்திரிபு ஆகக்கொண்டு, நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்று யாவையும் நெருங்க மனுநூல் வழியினிற் புரப்பான் என்று இயைப்பினுமாம்: மனுநூல் தவறாமற் புரப்பதனால் அவ்வரசனிடத்து நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்றுயாவையும் நெருங்குமென்க. நீர்வளத்தால் மச்சம் இடையறாது இருத்தல்பற்றி, அந்நாடு, மச்சநாடு எனப் படுவதாயிற்று. (4)
5. | ஆங்கவனகரியெய்திமற்றின்றேயைவருமணியுருக்கரந்து தீங்கறவுறைவதல்லதுவேறோர்சேர்விடமிலதெனச்செப்பத் தேங்கியவருளுக்கிருப்பிடமானசிந்தையான்சிந்தையாற்றுணிந்து பாங்குறையரசர்யாரையுந்தத்தம்பதிகளேசெல்கெனப்பகர்ந்தான். | (இ -ள்.) இன்றுஏ - இன்றைத்தினமே, அவன் நகரி எய்தி - அந்த விராடமன்னவனுடைய நகரியை யடைந்து, ஐவர்உம்,- நாம் ஐந்துபேரும், அணி உரு கரந்து-அழகிய (நம்) வடிவத்தை மறைத்துக்கொண்டு, தீங்கு அற- (யாதொரு) தீமையுமில்லாமல், உறைவது-வசிப்பதுவே (செய்யத்தக்கது): அல்லது-இதுவல்லாமல், வேறு ஓர் சேர்வு இடம்-சேர்தற்கு ஏற்ற வேறோரிடம், இலது-இல்லை, என-என்று, செப்ப-(அருச்சுனன்) கூற,-தேங்கிய அருளுக்கு இருப்பு இடம் ஆன சிந்தையான் - அருளுக்குத் தேங்கியிருக்கும் இடமான மனத்தையுடைய தருமபுத்திரன், சிந்தையால் |