பக்கம் எண் :

44பாரதம்விராட பருவம்

13.-கீசகனாதரத்தையாற்றநினைந்தஅவன்சேடியர்சுதேஷ்ணை
யிடம்வண்ணமகளைக்கீசகன்கண்டால்தான்ஆவிநிலைக்குமென்று
வேண்டுதல்.

பாவிதன்மனைச்சேடியரானவர்பலரும்வந்துபடியுடைமன்னவன்
தேவிதன்னைவணங்கியக்காமுகன்சிந்தைநோயுஞ்செயலும்புகன்றெழிற்
காவியங்கண்ணவளைத்தனதுகண்காணினுந்தணியுங்கடுங்காதலும்
ஆவியும்பெறுமெய்யணுகானினதாணையென்றனராதரமாற்றுவார்.

     (இ -ள்.) பாவிதன்-பாபிஷ்டனான கீசகனுடைய, மனை-வீட்டிலுள்ள,
சேடியர்ஆனவர் பலர்உம் - பணிப்பெண்கள் பலரும், வந்து-,-படி உடை
மன்னவன் தேவி தன்னை - பூமியைப் பாதுகாத்தலுடைய
விராடமன்னவனுடைய மனைவியை, வணங்கி-, ஆதரம் ஆற்றுவார்-
(அந்தக்கீசகனுடைய) காமவிடாயைத் தணிவிக்க முயல்பவராய்,- அ காமுகன்
சிந்தைநோய்உம் செயல்உம் புகன்று - காமநோய் கொண்டவனான
அந்தக்கீசகனுடைய மனத்திலுள்ள காமநோயையும் (அதற்கு ஏற்ப அவன்
மலரணை முதலியவற்றால் வெப்பங் கொள்ளுஞ்) செய்கையையும் சொல்லி,-
'எழில் காவி அம் கண்ணவளை - அழகிய கருங்குவளைமலர்போலும் அழகிய
கண்களையுடைய அந்த வண்ணமகளை, தனது கண் காணின்உம் -
(அந்தக்கீசகன்) தன் கண்களாற் கண்டாலும், கடுங் காதல்உம் தணியும் -
(அவன்இப்போதுகொண்டுள்ள) கொடியகாதல் தணியப்பெறுவான்: ஆவிஉம்
பெறும் - தன்னுயிரும் இறவாது நிலைத்திருக்கப்பெறுவான்:  மெய் அணுகான்
- அவளுடம்பைக் கட்டித் தீண்டான்: (இவ்விஷயத்தில்), நினது ஆணை-,'
என்றனர் - என்று கூறினார்கள்; (எ - று.)

     பிறர்மனைநச்சுதலென்பது பஞ்சமகாபாதகங்களு ளொன்றாதலால்,
அந்தப்பாதகத்திற்குத் துணிந்த கீசகனை, 'பாவி' என்றார்.  ஆதரம் மாற்றுவார்
என்றும் பிரிக்கலாம்.  காதலும் ஆவியும் - எச்சவும்மைகள்.        (65)

14.-அந்தச் சேடியரின்சொல்லைக் கேட்டதும்,
சுதேட்டிணை கீசகன்செயலுக்குவருந்திப் புலம்புதல்.

பாசகாரிகளாமைம்புலன்களும்பரிவுகூரப்பரிந்துயர்ந்தோர்புகல்,
வாசகாதிகள்கற்றுந்தெளிந்திலைமதனவேதத்தின்மார்க்கமும்
                                       பார்த்திலை,
நாசகாலம்வரும்பொழுதாண்மையும்ஞானமுங்கெடுமோநறுந்தார்
                                            முடிக்,
கீசகாவென்றழுதனளம்மொழிகேட்டபோதக்கிளிநிகர்மென்சொலாள்.

    (இ - ள்.) அ மொழி கேட்ட போது -(சேடியர் சொன்ன) அந்த
வார்த்தை செவிப்பட்டபோது,-அ கிளி நிகர் மெல் சொலாள் - கிளிபோன்று
மென்மையாகப் பேசுபவளான அந்தச்சுதேஷ்ணை,-'பாசகாரிகள் ஆம்-
மனப்பிணிப்பை யுண்டாக்குவனவான, ஐம்புலன்கள்