பக்கம் எண் :

46பாரதம்விராட பருவம்

விழியருள் உண்டெனில் என்பதன் கருத்து - என்மீது கருணை கொண்டு
நான் சொல்வதையேற்றுப் புரிவாயோயானால் என்பது. இது என்று சுட்டியது-
எனதுரை நீ குலைக்கில் அனைத்துமின்றே கெடும் என்பதை. கீசனது
புஜபலத்தினாலேயே விராடன் தேசத்தை இனிது ஆள்கின்றானென்பதுகருதி,
சுதேஷ்ணை இவ்வாறு கூறினாள். ஆல்-ஈற்றசை.                    (67)

16.

இளையனாதலினென்னிளையோன்மனத் தெண்ணமின்றியிகன்
                                    மதனம்பினால்,
அளையுமேனியனாகிநின்மெய்ந்நல மாதரித்தின்றடாது
                                    செய்நீர்மையால்,
விளையுமேகொடுவெம்பழியிப்பழிவிளைவுறாமல்
                                 விரகினாக்கானோய்,
களையுமாறெண்ணினாங்கவனாவியுங் காத்துநின்
                            பெருங்கற்பையுங்காக்குமால்.

     (இ-ள்.) என் இளையோன் - என் தம்பி, இளையன் ஆதலின் - (அறிவு
முதிராத) இளமைப்பருவத்தோ னானதனால், மனத்து-, எண்ணம் இன்றி -
ஆலோசனையில்லாமல், இகல் மதன் அம்பினால்- மாறுபாட்டையுடைய
மன்மதனுடைய அம்பினாலே, அளையும்-தொளைக்கப்பெற்று, மேனியன் ஆகி
- உடம்பையுடையவனாய், நின்மெய் நலம்-உனது உடலினாற்பெறலாகும்
இன்பத்தை, ஆதரித்து - விரும்பி, இன்று - இன்றைத்தினம், அடா(த)து -
தகாத செயலை, செய்-செய்யத்தொடங்கிய, நீர்மையால் - தன்மையினால்,
(முடிவில்), கொடு வெம் பழி-மிகக் கொடிய பழி, விளையும்ஏ-உண்டாகுமே:
இ பழி விளைவுஉறாமல்-இந்தப்பழி யுண்டாகாதபடி, விரகின் - தந்திரமாக,
அ காதல்நோய் - (அவனுடைய) அந்த ஆசைநோயை, களையும் ஆறு-
போக்கும்வகையை, எண்ணின் - எண்ணினால், ஆங்கு - அப்போது,
(அச்செயல்), அவன் ஆவிஉம்காத்து - அந்தக்கீசகனுடைய உயிரையுங்
காத்து, நின் பெருங்கற்பைஉம் காக்கும்-; (எ-று.) - ஆல்-தேற்றம்.

     திரௌபதியின் மேனியைத் தீண்டினால் பிறர்கற்பை
யழித்தானென்றபழியும், தீண்டாது உயிரொழிந்தால் பிறர்மனை நயந்து உயிர்
நீத்தா னென்ற பழியும் கீசகனுக்கு விளையுமென்னலாம். பழி விளையாமல்
அந்தக்கீசகன் உயிருய்வதற்கு உபாயம் மேலிற் கவியிற் கூறுகிறாள்:
அச்செயலை நீ செய்யவேணுமென்றே பதினைந்தாஞ் செய்யுளில் சுதேஷ்ணை
வேண்டியது.                                                 (68)

17.

எண்ணுகின்றனன்யானொன்றுநீமறா தெனதுவாய்மையெதிர்
                               கொண்டிளையவன்,
நண்ணுமில்லிடைச்சென்றிந்தநாண்மலர்நகைகொண்மாலையை
                                  நல்கினைமீளுவாய்,
கண்ணினின்னுருக்காணினுமற்றவன் கன்னமின்புறக்
                                 கட்டுரைகேட்பினும்,
வண்ணமாமகளேயுயிர்நிற்குநீவாழியேகிவருகெனவாழத்தினாள்.

     (இ-ள்.) யான் ஒன்று எண்ணுகின்றனன் - யான் ஒரு வார்த்தையை
ஆலோசித்துச் சொல்லுகின்றேன்:நீ -, மறாது - மறுத்துச்சொல்லாமல், எனது
வாய்மை - எனது வாயிலிருந்து வருவதை,