பக்கம் எண் :

50பாரதம்விராட பருவம்

வரங்கொள்வேனின்னையான்மரபுபொன்றுமென்று
இரங்குறுமென்னகத்திடரைநீக்குவாய்.

        இரண்டுகவிகள் - ஒருதொடர்.

    (இ - ள்.) துரங்கம் ஓர் ஏழ் உடன் - ஏழுகுதிரைகளுடனே, சோதிகூர் -
ஒளிமிக்க, ஓர் ஆயிரம் மணி கரங்கள் - அழகிய ஆயிரம் கிரணங்கள், கவின
- விளங்கும்படி, தோன்றினாய்-உதித்துள்ளவனே! நின்னை யான் வரம்
கொள்வேன்-உன்னிடத்துப் பின்வருமாறு நான் வரம் பெறுவேன் [நீ எனக்கு
ஒருவரம் தரவேணு மென்றபடி]: 'மரபு-என்குலத்தின் பெருமை [கற்புநெறி
கெடாத்தன்மை], பொன்றும்-(இந்தக் கீசகனால்) அழிவுறுமே!' என்று-,
இரங்குறும் - வருந்துகின்ற, என் அகத்து-என்மனத்திலுள்ள, இடரை-
துன்பத்தை, நீக்குவாய் - போக்குவாயாக; (எ - று.)

     சூரியன் தேர்க்குக் குதிரைகள் ஏழ் என்று சிலவிடத்தும், சூரியன்
குதிரைகள் ஏழில் ஒன்று ஏழ் [ஸப்த] என்றபெயரினது என்று சிலவிடத்தும்
கூறப்பட்டுள்ளது.                                            (74)

23.-சூரியனை வேண்டிநின்றதிரௌபதி கீசகன்முன்னர்
மலர்மாலையைக் கொடுத்துவிட்டு நிற்றல்.

என்றுகொண்டென்றினைப்பணிந்துமன்றலால்
கன்றியகீசகக்கலகன்முன்புபோய்
மன்றலந்தொடையலும்வழங்கிமெய்வெரீஇ
நின்றனளானிலைநின்றகற்பினாள்.

     (இ - ள்.) என்று கொண்டு - என்றுசொல்லிக்கொண்டு, என்றினை-
சூரியனை, பணிந்து-வணங்கி,- (பின்பு), மன்றலால் - புணர்ச்சி விருப்பினால்,
கன்றிய-வாடிய, கீசகன் கலகன்-கீசகனென்ற கலகஞ்செய்வானது, முன்பு -
முன்னிலையில், போய்-, -மன்றல் அம்தொடையல்உம் வழங்கி -
நறுமணமுள்ள அழகிய பூமாலையையுங் கொடுத்துவிட்டு, மெய் வெரீஇ -
உடல் நடுக்கங் கொண்டு, நின்றனள்-: (யாவளெனில்)-, நிலை நின்ற கற்பினாள்
- உறுதியாகவுள்ள கற்பையுடையவளான திரௌபதி; (எ - று.)

   
எத்துணைக்கொடியவனாயிருப்பினும் அவன்முன் நிற்கும்போதும் தன்
கற்பைக் கெடாது பாதுகாத்துக்கொள்வது என்ற உறுதியுடன் திரௌபதி நின்றன
ளென்பார் 'நிலைநின்ற கற்பினாள் நின்றனள்' என்றார்.  கீசகக்காவலன் என்று
பிரதிபேதம்.  ஆல்-அசை.                                (75)

24.-அப்போது கீசகன் படுக்கையி லிருந்தநிலை.

காமருகுளிரிபைங்கதலிமெல்லடை
தாமரைவளையம்வண்டாதறாமலர்
ஆமுறையனைத்துமெல்லமளிமேல்விரித்து
ஈமவல்லெரியின்மேலென்னவைகினான்.