பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 51

   (இ - ள்.) காமரு குளிரி - அழகிய குளிர்ச்சியையுடைய, பைங்கதலி
மெல் அடை - இளைய வாழையின் மெல்லிய தளிரிலையும், தாமரைவளையம்
- தாமரைச்சுருளும், வண் தாது அறா மலர் - வளப்பமுள்ள மகரந்தம் நீங்காத
தாமரைமலரும், ஆம் - முதலாகிய, முறை அனைத்துஉம் - முறைமையாகிய
யாவும், மெல் அமளிமேல் விரித்து - மெல்லிய படுக்கையின்மேற் பரப்பி, ஈமம்
வல் எரியின் மேல் என்ன - சுடுகாட்டிற் சுடுநெருப்பின் மீது (பிணம் இருப்பது)
போல, வைகினான்-(தவிப்புற்றுத்) தங்கியிருந்தான்; (எ - று.)

   காமவெப்பத்தைப் பொறுக்கமாட்டாது கீசகன் குளிர்ச்சியை வேண்ட,
ஏவலாளர் சைத்தியோபசாரமாகப் படுக்கையில் வாழைத்தளிர் முதலியவற்றை
யிட்டுவைத்தனராக, அதன்மேற் படுத்திருக்கும் கீசகனுக்கு அப்படுக்கையும்
பெருவெப்பத்தைச் செய்வதனால், ஈமவெரியின்மேற் கிடப்பது போலத்
தவிப்புற்றுக் கிடந்தன னென்கிறார்.  இவனுக்கு உண்டாகிய காமதாபம்
இவனுயிரையே கொண்டுபோவதற்குக் காரணமா மென்று குறிப்பிக்க, இவனுக்கு
உயிருடனிருக்கும்போதே ஈமவெரியிற் கிடந்தாற்போலுந் தன்மை வாய்த்த
தென்றது.  குளிரி - கல்லாரமலரென்பாரும், பீலிக்குஞ்சமென்பாரு முளர்.(76)

25.-பலமாதர் சந்தனம் முதலியவற்றை அவன்தாபந்தணிக்கக்
கருதி வீச, அவையும் வெப்பத்தை மிகுவிப்பன வாதல்.

சாந்தொடுதண்பனி நீருந்தாமமும்
ஏந்தியகரத்தின ரேழைமார்பலர்
காந்தியகனன்மிசைக் காட்டுநெய்யென
வேந்தனதுடலகம் வெதும்பவீசினார்.


   (இ - ள்.) சாந்தொடு - சந்தனமும், தண் பனி நீர்உம் - குளிர்ந்த
பனிநீரும், தாமம்உம் - பூமாலையும், ஏந்திய - தாங்கியுள்ள, கரத்தினர் -
கைகளையுடையவரான, ஏழைமார் பலர் - பலஸ்திரீகள்,-(தாம் ஏந்திய அந்தச்
சாந்துமுதலியவற்றை), காந்திய - பற்றியெரிகின்ற, கனல் மிசை-நெருப்பிலே,
காட்டும்-சொரியப் பெறுகின்ற, நெய் என - நெய்யைப்போல, (ஏற்கெனவே
காமதாபத்தால் வெப்பங்கொண்டுள்ள), வேந்தனது - (கீசகனென்ற)
அரசகுமாரனது, உடல் அகம் - உடம்பு, வெதும்ப - (பின்னும்)
தாபங்கொண்டுஎரியுமாறு, வீசினார் - எறிந்தார்கள்: (எ - று.)

     பற்றியெரிகின்ற நெருப்பிற் பெய்யும் நெய் எங்ஙனம் அந்த நெருப்பைப்
பின்னும் பற்றியெரியுமாறு செய்யுமோ, அங்ஙனமே ஏழைமார் கீசகன்மீது
பெய்த சாந்து முதலியவை அவன்காமதாபத்தை மிகுவிக்கலாயின வென்பதாம்.
'வீசினார்' என்ற சொல்லினாற்றலால், அவனருகே வந்து சந்தனத்தை யப்புதல்
முதலியன செய்யவும் இயலாதபடி அவன்மேனி வெப்பம் மிக்கிருந்த தென்பது
பெறப்படும்.  கீசகனுடைய விரகதாபத்தைச் சந்தனம் முதலியன