பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 53

யளிப்பா ளென்னுங் கருத்தினால், அவளை 'வழிபடுந்தெய்வம்' என்கின்றான்.
"தனியும் ஒரோவழி" [நன். பொது. 41] என்றதனால் "மாதவப்பயன்"
"வழிபடுந்தெய்வம்" என்பவை முதலிய பெயர்ச்சொற்கள் ஒரு பொருளையே
குறிப்பன என்று தெரிய நிற்பதனால், பெயர்தோறும் ஒருவினையே
கொடுக்கப்பட்டது.  என்னுடை ஆவிவாழ்வு உற என்னுடை
வண்ணமங்கைவந்தனள் என்றுகூட்டி யுரைப்பாருமுளர்.               (79)

28.

வருகநீயருகுற மதுரவாசகம்
தருகநீயிருசெவிதழைக்கவுள்ளநின்று
உருகநீதழுவுக வுடலந்தேமுறப்
பருகநீவழங்குக பவளவாயெனா.

     (இ - ள்.) நீ-, அருகு உற -சமீபத்திற் பொருந்த, வருக -: நீ-, இருசெவி
தழைக்க - (என்னுடைய) இரண்டுகாதுகளும் செழிக்குமாறும், நின்று உள்ளம்
உருக-(உன் வாசகங்கள் என்மனத்திலே) நிற்பதனால் (அந்த) மனம்
உருகுமாறும், மதுரம் வாசகம் - இனிய வார்த்தைகளை, தருக-: உடலம் தேம்
உற - என்னுடம்பு இன்பமடையுமாறு, நீ-, தழுவுக-: நீ-, பருக- (நான்)
நுகருமாறு,- பவளம் வாய் - பவழம் போன்ற (உன்) வாயிதழை, வழங்குக -
தருவாயாக, எனா - என்று சொல்லி,-(எ - று.)- "கிடந்தவனெழுந்து" என்று
மேற்கவியில் தொடரும்.  ஆதரத்தினால், 'நீ' என்பது வாக்கியந்தோறும்
வந்தது.                                                  (80)

29.-தன்னைக் கீசகன் பற்றவருகையில் திரௌபதி யோட,
கீசகனும் தொடர்ந்து செல்லுதல்.

கிடந்தவனெழுந்தொருகேடுவந்துறா
மடந்தையைத்தழுவுவான்வந்துசார்தலும்
விடந்திகழ்விழியினாளோடவேட்கையால்
தொடர்ந்தனனறிவிலாச்சோரன்றானுமே.

      (இ -ள்.) கிடந்தவன் - (படுக்கையிற்) படுத்திருந்தவனான கீசகன்,
எழுந்து-, ஒரு கேடு வந்துறா மடந்தையை-ஒருதீங்கும் வரப்பெறாத
பெண்ணாகிய திரௌபதியை, தழுவுவான் - ஆலிங்கனஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டு, வந்து சார்தலும் - வந்துசேர்ந்த வளவில்,- விடம் திகழ்
விழியினாள் - கொடுமைவிளங்குகின்ற கண்பார்வையையுடையவளான
அந்தத்திரௌபதி, ஓட - ஓடாநிற்கையில்,-அறிவு இலா சோரன் தான்உம்-
நல்லறிவு இல்லாத கள்ளநெஞ்சை யுடையனான அந்தக்கீசகனும், வேட்கையால்
- காதலால், தொடர்ந்தனன் - (அவளைத்) தொடர்ந்து சென்றான்; (எ - று.)

     'கேடுவந்துறா மடந்தை' என்றது, அவளுடைய பாதிவிரதியத்திற்கு
ஒருவராலுந் தீங்கு இழைக்கமுடியாது என்ற குறிப்பினது.  அவள் நோக்கே
அந்தக் கீசகனுடைய மரணத்திற்குக் காரணமாவதால், 'விடந்திகழ் விழியினாள்'
என்ற தென்னலாம்: அன்றியும், கருவிழிக்கு விடத்தை உவமை கூறுதலும்
உண்டு.                                                      (81)