பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 55

செய்யமாட்டானென்ற நம்பிக்கையு மாகும்.  'ஆசைவெட்கமறியாது' என்பது,பழமொழி.                                             (83)

32.-சூரியனேவலால் ஒருகிங்கரன் விரைவாகவந்து
அந்தத் திரௌபதியைத் தீண்டாதவாறு கீசகனைஅப்பால் வீசுதல்.

உன்னுமவ்வளவையினுருளையொன்றுடைப்
பொன்னெடுந்தேரவன்புகலமற்றொரு
வன்னெடுங்கிங்கரன்சூறைமாருதம்
என்னவந்தடுத்தயலெடுத்துவீசினான்.

      (இ-ள்.) உன்னும் அ அளவையின்-(திரௌபதியை அந்தக்கீசகன்
தீண்ட) நினைத்த அவ்வேளையில், உருளை ஒன்று உடை பொன்நெடு
தேரவன்-ஒற்றைச்சக்கரம் பூண்ட அழகிய நீண்ட தேரையுடையவனான
சூரியபகவான், புகல-ஏவ,-மற்று ஒரு வல் நெடு கிங்கரன் - வேறொரு வலிய
நெடிய பணியாளன், சூறை மாருதம்என்ன அடுத்து வந்து - சுழல்காற்றுப்போல
விரைந்து கிட்டிவந்து, எடுத்து -, அயல் வீசினான்-(அந்தக் கீசகனைத்
திரௌபதியைத் தீண்டாதபடி) அப்பால் எறிந்திட்டான்; (எ - று.)

      கீழ்இருபத்திரண்டாஞ் செய்யுளில் "இரங்குறு மென்னகத்திடரை
நீக்குவாய்" என்று சூரியனைநோக்கி வேண்டிக்கொண்டதற்கு ஏற்ப,
அவனாலேவிய கிங்கரன் இந்தத் திரௌபதியைப் பாதுகாத்தன னென்க. தான்
இருந்த இடத்திற்குச் சுதேஷ்ணையின் கட்டளையினால் திரௌபதி
சுராபாத்திரத்தைக் கொணர்கையில் கீசகன் இவளைக்கண்டு வலியக்
கையைப்பற்ற, இவள்உதறிக்கொண்டு செல்லுகையில் அந்தக்கீசகன்
இவளைப்பின்தொடர்ந்து சென்று இராசசபையிலே கூந்தலைப்பற்றிச்
சினத்தினால் இவளைக்காலினால் தள்ள, அப்போது சூரியனாலேவப்பட்ட
ராக்ஷதனொருவன் வந்து அந்தக் கீசகனைப் பூமியில் தள்ளினானாக, பின்னர்
இவள் விராடராசனிடத்து முறையிட்டும் அவன் விசாரியாதுவிட்டனனென்று
முதனூல் கூறும்.                                          (84)

33.-விராடன்கீசகன்செயலைக் கண்டறிந்தும் அச்சத்தினால்
வாளாவிருத்தல்.

கண்டனனிருந்தமண்காவல்வேந்தனும்
எண்டகுநெறிமுறை யிடறுகீசகன்
திண்டிறல்வலிமையுஞ்செயலுஞ்சிந்தையில்
கொண்டொருவாய்மையுங்கூறவஞ்சினான்.

      (இ-ள்.) இருந்த - (வேத்தவையிலே) தங்கியிருந்த, மண் காவல் வேந்
தன்உம் - பூமியைப் பாதுகாத்தலையுடைய விராடவரசனும், கண்டனன் -
(கீசகனுடைய அக்கிரமச் செயலைக்) கண்கூடாக் கண்டவனாயிருந்தும்,-எண்
தகு நெறிமுறை - (பெரியோரால்) மதித்தற்குஉரிய நியாயவழியினின்று, இடறு -
தவறிய, கீசகன் - கீசகனுடைய, திண் திறல் வலிமைஉம் - மிக்க
வலிமையையும்,