செயல்உம் - அக்கிரமச் செய்கையையும்,சிந்தையில்கொண்டு மனத்திலெண்ணி, ஒரு வாய்மை கூறஉம் - ஒருவார்த்தை சொல்லவும், அஞ்சினான்-; (எ - று.)
அரசனாதலால் நீதியிற்பிழைத்தகீசகனைத் தண்டிக்கவேண்டியதே முறையாயிருக்க அதைச் செய்யாவிடினும், 'நீ செய்வது முறையன்று: தகாதசெயல்' என்றாவது சொல்லியிருக்கலாமே; அதுவுஞ் செய்திலனென்பதாம். 'வாய்மையும்' என்ற இடத்தினின்று பிரித்துக் கூட்டப்பட்ட உம்மை, எச்சப்பொருளது. மண் - அலக்ஷ்யம் தொனிக்கின்றது. (85) 34.-கீசகன் திரௌபதி இவர்கள்செயலைக்கண்ட வீமன், கீசகனை யழிக்குமாறு ஒருமரத்தைப் பிடுங்கும்படி வெகுண்டு நோக்குதல். அடுதொழிற்பலாயன னழுதமின்னையும் கடுமையிற்பின்றொடர் காளைதன்னையும் படருறக்கண்டுதன் பாங்கர்நின்றதோர் விடவியைப்பிடுங்குவான் வெகுண்டுநோக்கினான். |
(இ - ள்.) அடு தொழில் -(அரண்மனையிலே) சமையல்வேலையி லமர்ந் திருந்த, பலாயனன் - பலாயனனென்று மாறுபெயர் பூண்ட வீமசேனன்,- அழுத மின்னைஉம் - அழுதுகொண்டு முன்னே செல்கின்ற மின்னல் போல்பவளான திரௌபதியையும், கடுமையில் - விசையாக, பின் தொடர் - (அந்தத் திரௌபதியைப்) பின்னே தொடர்ந்துசென்ற, காளை தன்னைஉம் - இளவெருது போல்பவனான கீசகனையும், படர் உற - (தன்மனத்துத்) துன்பமுண்டாக, கண்டு - பார்த்து,- தன் பாங்கர் நின்றது ஓர் விடவியை - தன்பக்கத்திலிருந்ததொரு மரத்தை, பிடுங்குவான் - (அந்தக்கீசகனை மோதியொழிக்கும்படி) வேரோடு பிடுங்கும்பொருட்டு, வெகுண்டு நோக்கினான் - சினக்குறிப்புக்கொண்டு பார்த்தான்; (எ - று.)
விடவி = விடபீ: கிளைகளையுடையது எனமரத்திற்குக் காரணக்குறி. முதலில் மரத்தைப் பிடுங்குவான் வெகுண்டு நோக்கியது, தருமன் கருத்தை யுணர்தற்பொருட்டென்னலுமாம். (86) 35.-தருமன் அந்தவீமன்செயலைக் குறிப்பாக விலக்குதல். கனிட்டனதெண்ணமக் கங்கனாகிய முனித்தகையுணர்ந்தவன் முகத்தைநோக்கியித் தனிப்பெருமராமரந் தழல்கொளுந்திடாது உனக்கடுமிந்தன மன்றென்றோதினான். |
(இ - ள்.) கனிட்டனது-(தன்னினுஞ்)சிறியவனாகிய வீமசேனனுடைய, எண்ணம் - கருத்தை, அ கங்கன் ஆகிய முனி தகை - அந்தக் கங்கனென்று மாறுபெயர்பூண்ட துறவியாகிய நற்குணமுள்ள தருமபுத்திரன், உணர்ந்து - தெரிந்துகொண்டு, (அச்செயலைத் தடுக்குமாறு), அவன் முகத்தை நோக்கி - அந்த வீமசேனனுடைய முகத்தைப் பார்த்து, 'இ தனி பெரு மராமரம் - இந்தத் |