பக்கம் எண் :

58பாரதம்விராட பருவம்

                   நான்கு கவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) '(என்னை), தீண்டுதல்-,தகாது-', என - என்று சொல்லவும்,-
செம்மை ஒன்று இலான் - நற்குணம் சிறிதுமில்லாதவனாகிய கீசகன்,
வேண்டிய(து)-(தான்) விரும்பியசெயலை, செய்வது - செய்யவிடுவது, வேந்து
நீதிஓ - அரசநீதிக்கு ஏற்குமோ? ஆண்தகை - ஆண்மைக்குண முடையோனே!
நீ-, இதற்கு - இந்தக் கீசகனுடைய செய்கைக்கு, 'அல்ல - (இது)
செய்யத்தக்கதல்ல: (அன்றி), ஆம் - (இது) செய்யத்தக்கதே,' எனா - என்று,
ஈண்டு - இப்போது, ஒரு மொழி - (இவ்விரண்டில்) ஒருசொல்லை, கொடாது -
தராமல் [வாய்விட்டுச் சொல்லாமல்], இருப்பது-, என் கொல்ஓ -
என்னகாரணமோ? (எ - று.)

      நான்கீசகன்செயலைக்குறித்து உன்னிடம் முறையிட்டுக்
கொள்ளுகிறேனே!இப்போது இந்தக்கீசகன்செயலை மன்னவனாகிய நீ
கண்டிக்கவாவதுவேண்டும்:  அல்லது அது செய்யமுடியாவிட்டால்,
அவன்செயல் சரியேயென்றாவது பாராட்டவேண்டும்: இவ்விரண்டில்
ஒன்றுஞ்செய்யாது இருப்பதும்ஒருமுறையோ! என்கிறாள். 
அக்கிரமஞ்செய்வதைக் கண்டிப்பதுசெங்கோலன்முறை:
அக்கிரமத்தைச்சரியென்பது கொடுங்கோலன்முறை:இவ்விரண்டில் ஒன்றிலுஞ்
செல்லாதது என்னே! என்கிறாள்.  வேந்து + நீதி =வேத்துநீதி.      (89)

38.அன்புடைத்தேவிதன்னருகுதோழியாய்
நின்பெருங்கோயிலினீடுவைகினேன்
என்பெருவினையினாலின்றுன்மைத்துனன்
தன்புயவலியினாற்றழுவவுன்னினான்.
 
    (இ - ள்.) அன்பு உடை - (என்னிடத்து) அன்புள்ள, தேவி தன் அருகு
-(உனது) அரசியின் சமீபத்திலே, தோழி ஆய் - தோழியாகி, நின் பெருங்
கோயிலின் - உனது பேரரண்மனையில், நீடு - வெகுநாட்கள், வைகினேன் -
தங்கினேன்: என் பெரு வினையினால் - என்னுடைய பெருத்த
தீவினையினாலே, இன்று-, உன் மைத்துனன்-, தன் புயம் வலியினால் -
தன்னுடைய புஜபலத்தைக்கொண்டு, தழுவ-(என்னை)
ஆலிங்கனஞ்செய்துகொள்ளுதற்கு, உன்னினான் - நினைத்தான்; (எ - று.)

      புயவலிபடைத்திருத்தலால் தான் அக்கிரமச்செயலைச் செய்தாலும்
மன்னவன் கண்டிக்கமாட்டா னென்ற கருத்தினாலேயே அந்தக்கீசகன்
என்னைத் தழுவநினைத்தது என்று குத்துப்பாடாகத் திரௌபதி எடுத்துக்
காட்டுகின்றா ளென்க.  மைத்துனன் - மனைவியினுடன் பிறந்தவன்.     (90)

39.பெருந்தகையன்றிது பேசலன்றிநீ
யிருந்தனையுனக்கரசெங்ஙன்செல்வது
வருந்தினர்வருத்தநீமாற்றலாயெனின்
அருந்திறலரசநின்னாணைபொன்றுமே.