பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 59

     (இ -ள்.) நீ-, இது பேசல் - (கிசகனைக் கண்டித்துக்) கூறுவதான
இச்செயலை, அன்றி - செய்யாமல், இருந்தனை-: பெருந் தகை அன்று - (இது
உனக்குப்) பெருமைக்குணமாகாது: உனக்கு-(அநீதி புரிபவரைக்
கண்டிக்கமாட்டாத) நினக்கு, அரசு - அரசத்தன்மை, எங்ஙன் செல்வது -
எங்ஙனம் நடக்கும்? அரு திறல் - அருமையான திறமையையுடைய, அரச -
அரசனே! வருந்தினர் - வருத்தமடைந்தவரின், வருத்தம் - வருத்தத்தை, நீ-,
மாற்றலாய் - மாற்ற வல்லமையற்றவன், எனின் - என்றால், நின் ஆணை
பொன்றும் - உன்னுடைய அரசுசெலுத்துந்தன்மை அழிந்துவிடும்; (எ - று.)-ஏ
- இரக்கம்.

     அரசத்தொழிலென்பது நலிவுபட்டோரைக் காத்தலே யாதலால், அது
செய்யமாட்டாத அரசும் அரசோ! என்றவாறு.  பெருந்தகை - பண்புத்தொகை.
அருந்திறல்என்ற அடைமொழி எள்ளலைக் குறிப்பிக்கு மென்னலாம். (91)

40.-இங்ஙனம் புலம்பிய திரௌபதி அந்தக்கோலத்தோடு
மன்னவன்தேவியிடம் வீழ்ந்து ஏங்குதல்.

எனவிவள்புலம்பிமெய்யேய்ந்தபூழியும்
கனதனநனைத்திடுங்கண்ணினீருமாய்
மனமிகமறுகிடமன்னன்றேவிபால்
இனைவுடனெய்திவீழ்ந்தேங்கிவிம்மினாள்.

      (இ -ள்.) என - என்று, இவள் - இந்தத்திரௌபதி, புலம்பி - அழுது,
மெய் - உடம்பிலே, ஏய்ந்த - படிந்த, பூழிஉம்-புழுதியும், கனம் தனம்
நனைத்திடும்-பருத்த தனங்கள் நனையப்பெற்ற, கண்ணின் நீர் உம் ஆய்-
கண்ணீரையுங் கொண்டவளாய், மனம் - (தன்) நெஞ்சம், மிக மறுகிட -
மிகவுங் கலங்க, மன்னன் தேவிபால் - விராடமன்னவனுடைய மனைவியாகிய
சுதேஷ்ணையினிடம், இனைவுடன் - வருத்தத்துடனே, எய்தி-போய்ச்சேர்ந்து,
வீழ்ந்து - கீழ்வீழ்ந்து, ஏங்கி விம்மினாள் - ஏக்கமுற்று அழுதாள்;(எ - று.)

     ஏங்குதல் - அக்கிரமஞ்செய்தவனையொறுத்துத் தன்னைப்
பாதுகாக்கவேண்டியசெயலை மன்னவன் செய்யாமையால் மனவாட்டங்
கொள்ளுதல்.                                                (92)

41.-மூன்றுகவிகள்-ஒருதொடர்: கங்கனென்று மாறுபேர்பூண்டிருந்த
யுதிஷ்டிரன் விராடனுக்கு இடித்து மதிகூறுதலைத் தெரிவிக்கும்.

பூதலமாண்மையாற்புரக்குமன்னவர்
தீதொழில்புரிஞரைத்தெண்டியாரெனின்
நீதியுஞ்செல்வமுநிலைபெறுங்கொலோ
ஏதிலர் தமரெனவிரண்டுபார்ப்பரோ.

      (இ -ள்.) பூதலம் - பூமியை, ஆண்மையால் - (தமது) பராக்கிரமத்தால், புரக்கும்-பாதுகாக்கின்ற,மன்னவர் - அரசர், தீ தொழில் புரிஞரை - கொடுஞ்செயலைச் செய்கின்றவரை, தெண்டியார்எனின் - சிட்