கும்குற்றம்விளைப்பதே, என்று - இவ்வாறு, இருந்த - (ராஜசபையிலே) தங்கியிருந்த, வேந்தொடுஉம் - விராடராசனோடும், வாசகம் பல சொனான் - பலவாசகங்களைச் சொன்னான்: (யாவனெனில்),-மறைவலான்உம் - வேதங்களில் வல்லவனான அந்தணவடிவங்கொண்டிருந்த யுதிஷ்டிரனும்; (எ -று.) இரண்டாவது அடி, முதலடியைச் சமர்த்தித்துநின்றது: வேற்றுப்பொருள்வைப்பணி. கீசகனாயினும் என்ற இடத்துள்ள சிறப்பும்மை -அவன் வலியுடையவனும் மன்னவனுக்கு நெருங்கிய உறவினனும் என்றபொருளைக் காட்டும். நினக்கும் என்ற எச்சஉம்மை - எவ்வாறு கீசகனுக்கு ஏசு உண்டாக்குமோ அதுபோலவே உனக்கும் ஏசினையுண்டாக்கும் என்ற கருத்தினது. (95) 44.-விராடன் மனமழிந்து தன்மனையிற் சேர்தல். முன்னுறமுனிவரன்மொழிந்தவாய்மையும் இன்னலோடழுதவளிசைத்தவாய்மையும் கன்னமூடுறச்சுடக்கருத்தழிந்துபோய் மன்னனுந்தன்றிருமனையிலெய்தினான். |
(இ -ள்.) முன் உற -(தன்) எதிராக, முனிவரன் மொழிந்த - முனிச் சிரேஷ்டனான கங்கனென்ற யுதிஷ்டிரன் சொன்ன, வாய்மைஉம் - உண்மையான வார்த்தையும், இன்னலோடு - மனவருத்தத்தோடு, அழுது - புலம்பிக்கொண்டு, அவள் - அந்தத்திரௌபதியாகிய வண்ண மகள், இசைத்த- சொன்ன, வாய்மைஉம் - உண்மைவார்த்தையும், கன்னம் ஊடுஉற - காதைத்தொளைத்துக்கொண்டு சென்றதனால், சுட - (தன்) மனத்தைச் சுடவே, மன்னன்உம் - விராடராசனும், கருத்து அழிந்துபோய் - மனம் அழிந்திட்டு, தன் திருமனையில் - தன் அழகிய வீட்டிலே, எய்தினான் - போய்ச்சேர்ந்தான்; (எ - று.) 'முன்னுற' என்பது - மொழிந்த என்பதனோடு மாத்திர மன்றி, இசைத்த என்பதனோடும் இயையும். 'மன்னனுந் தன் திருமனையிலெய்தினான்' என்ற இடத்து - உம்மை, மேற்செய்யுளில் 'வீமன் மடையி லெய்தினான்' எனத்தழுவுவதால், எதிரதுதழுவியஎச்சமாம்: இனி 'மன்னன் தேவிபால் திரௌபதி யெய்தி' என்றதைத் தழுவுவதால், இறந்தது தழுவியதுஎனினுமாம்.(96) 45.-வீமனும் சமையல்செய்யுமிடத்துக்குச் செல்லுதல். கண்ணெருப்பெழவிரு கைந்நெருப்பெழ உண்ணெருப்பெழத்தனதுடனெருப்பெழ மண்ணெருப்பெழவெழமடையிலெய்தினான் திண்ணெருப்பினுமிகுசினங்கொள்வீமனே. |
(இ -ள்.) திண் நெருப்பின்உம் - (எப்படிப்பட்ட பொருளையும் எரிக்கும்)வலிமையுள்ள நெருப்பைக்காட்டிலும், மிகு சினம் கொள் - மிக்ககோபத்தைக்கொண்ட, வீமன் -,-கண் நெருப்பு எழ - |