வலம்வந்துபகலையுண்டாக்குவ னென்ப. இந்தச் சூரியன், விரதசாரிணிக்குத் துன்பம் உண்டாகி அன்னாள் முறையிடவும் அதனைச் செவியேற்று அன்னாள்துயரத்தைப் போக்காது வாளாவிருந்த தன்வமிசத்தவனான விராடனை வெறுத்துத் தான் அங்கிருத்தற்கும் விருப்பற்றுத் தன்தேரை மேற்குமலையான அஸ்தமயமலையில் உருண்டு செல்லச் செலுத்தி அம்மனவேறுபாட்டால் தான்செல்லுந்திசையும் சிவப்புறத் தன்மெய்யுஞ் சிவந்தா னென்பதாம். சிவத்தல் - வெகுளிக்குறி; வெகுளி - நீதி நடத்தாமைபற்றி விராடன்மேற்கொண்டது: சிவத்தல் நாணத்தினாலாகியதுமாம்.
இதுமுதல் ஒன்பது கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று நான்கு ஐந்தாஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நானகுகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். 47.-விராடநகரத்தில் யாவரும் ஆகுலமுறுதல். குந்திதன்புதல்வரைவருஞ்சோகமுதிர்ந்திடவிதயமுங்கொதித்தார், வெந்திறல்வடிவேல்விராடனுந்தனதுவேத்தியல்பொன்றலின்வெறுத் தான், செந்திருவனையசுதேட்டிணையென்னுந்தெரிவையுந்தெருமரலுழந் தாள், அந்தமாநகரிலனைவருநைந்தா ரார்கொலோவாகுலமுறாதார். |
(இ -ள்.) குந்திதன் புதல்வர் ஐவர்உம் - குந்திபுத்திரர்களான பஞ்ச பாண்டவர்கள், சோகம் முதிர்ந்திட - துயரம் மிக, இதயம்உம் கொதித்தார் - மனமும் அழன்றார்கள்: வெந் திறல் வடி வேல் விராடன்உம் - கொடுந்திறலையும் காய்ச்சியடிக்கப்பட்டவேற்படையையுமுடைய விராடராசனும், தனது - தன்னுடைய, வேந்துஇயல் - அரசத்தன்மை, பொன்றலின் - அழிந்திட்டதனால், வெறுத்தான்-: செந் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவைஉம் - அழகிய இலக்குமியையொத்த சுதேட்டிணை யென்னும் பெண்ணும், தெரு மரல் உழந்தாள் - மனச்சுழற்சி கொள்ளலானாள்: அந்த மா நகரில் - அந்தப் பெரிய நகரத்திலே, (இங்ஙன்), அனைவர்உம் - யாவரும், நைந்தார் - வருந்தினார்கள்: ஆகுலம் உறாதார் ஆர்கொல்ஓ-(அந்தநகரத்தில்) துன்பமடையாதார் யாவர்தாமோ? [எவருமில்லை என்றபடி]; (எ - று.) விராடநகரத்தில் யாவரும் வருந்தினாரென்பதை வற்புறுத்த, 'அந்தமாநனகரிலார்கொலோ வாகுலமுறாதார்? அனைவரும் நைந்தார்' என்று வினாவும் விடையுமாகக் கூறினர். (99) 48.-திரௌபதி நள்ளிரவில் வீமனைக் கிட்டிப் பகையைமுடிக்குமாறு வேண்டுதல். அனைவருந்துயின்றுகங்குலும்பானாளானபினழுதகண்ணீரோடு இனைவருதையல்கண்கணீர்மல்கவிறைமகன்மடைப்பளியெய்தி நினைவருசெற்றமுடித்திடவல்லார்நீயலதில்லையிக்கங்குற் கனைவருகழலாய்புரிவதியாதென்றாள்காளையுங்கனன்றிவை சொல்வான். |
|