பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 65

      பொறைஆடவர்க்கு வேண்டுமென்று வற்புறுத்துக் கூறப்பட்டிருப்பினும்
அப்பொறைக்குரிய இடத்து அதனை மேற்கொள்ளுதல் தக்கதேயன்றி,
முறையறப் பொருந்தார் புரிந்தபோது அப்பொறையை மேற்கொள்வது தகுதியன்
றென்பதாம்.  இவ்விஷயத்தைவிளக்கப் பின்னிரண்டடிகளை எடுத்துக்காட்டாகப்
பேசுகிறார்.

50. அரசவைப்புறத்திற்சௌபலன்சூதி  லழிந்தநாளினுமெமை
                                           யடக்கி,
முரசவெங்கொடியோன்றேசழித்தனனாலின்றுமம்முறைமையே
                                     மொழிந்தான்,
புரசைவெங்களிற்றின்மத்தகம்பிளக்கும் போருகிர்மடங்
                                   கல்போலின்னே,
துரிசறப்பொருதுகீசகனுடலந்துணிப்பன்யான்றுணைவரோ
                                       டென்றான்.

      (இ -ள்.) சௌபலன் சூதில் அழிந்த நாளின்உம் - சுபலனது புத்தி
ரனாகிய சகுனியோடு ஆடிய சூதாட்டத்தில் தோற்ற காலத்திலும், அரசு
அவைப்புறத்தில் - ராஜசபையிலே, (தீண்டாக்காலத்தில் திரௌபதியாகிய
உன்னைத் துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கொணர்வித்துத்
துகிலுரிகையிலும்) எமை-(தன் தம்பியராகிய) எங்களை, அடக்கி - (வெகுண்டு
பகையழிக்காதபடி) தடுத்து, முரசம் வெம் கொடியோன் - முரசமென்ற
வெவ்விய கொடியையுடைய யுதிஷ்டிரன், தேசு அழித்தனன் - (எங்களுடைய)
பராக்கிரமத்தை வெளியிடவொட்டாது செய்தான்:  இன்றுஉம் - இன்றைக்கும்,
அ முறைமைஏ - அந்தக்கிரமத்தின்படியே, மொழிந்தான் - (உன்னைப்
பரிபவப்படுத்திய கீசகனை அந்நிலையிலேயே யழிக்கவெட்டாது குறிப்பு)
மொழியால் தடுத்திட்டான்:  புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர்
உகிர் மடங்கல் போல் - கழுத்திடு கயிற்றையுடைய கொடிய மதயானையின்
மத்தகங்களைப் பிளக்கும் வல்லமையையுடைய போர்செய்யவல்ல
நகாயுதமானசிங்கததைப்போல, இன்னே - இப்போதே, பொருது - போர்செய்து,
துரிசு அற - (அன்னான் செய்த) குற்றம்நீங்க, கீசகன் உடலம் -
அந்தக்கீசகனுடைய உடம்பை, யான்-, துணைவரோடு - (அவனுடைய) தம்பி
மார்களுடனே, துணிப்பன் - பிளந்திடுவேன், என்றான் -: (எ - று.)

     'இக்கங்குல் புரிவது யாது?' என்று வினாவிய திரௌபதிக்கு, வீமன்
'இன்னே கீசகனுடலத்தைத் துணைவரோடு துரிசறத்துணிப்பன்' என்று
விடைகூறியவாறு.  தேசு-தேஜஸ்: ஒளி: வீரர்கட்குள் மிக்குத்தோன்றுதற்குக்
காரணமான பராக்கிரமம்.  ஆல் - தேற்றம்: ஈற்றசையுமாம்.          (102)

51.-தருமபுத்திரன் தடுத்ததற்குத் திரௌபதி காரணங் கூறுதல்.

மருத்தின்மாமதலைவார்த்தைகேட்டந்த மருச்சகன் மடக்கொடி
                                      யுரைப்பாள்.  
உரைத்தநாளெல்லாஞ்சில்பகலொழிய  வொழிந்தனவொழி
                                    விலாவுரவோய், 
அருத்தியோடொருவரறிவுறாவண்ண  மிருந்தசீரழி
                                    வுறுமென்னுங்,
கருத்துநின்றம்முற்குண்மையிற்றடுத்தான் காலமுந்தேய
                                    முமுணர்வான்.