பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 67

      (இ -ள்.) பாயும் வெம் சிறகர் - (வானத்திற்) பாய்ந்து செல்ல வல்ல
வெவ்விய சிறகுகளையுடைய, கலுழன்முன் - கருடனுக்கு முன்னே, பட்ட -
அகப்பட்ட, பாந்தள் போல் - பாம்புபோல, இந்த கங்குலில் - இன்று இரவில்
தானே, கீசகன்-, பதைப்ப - உயிர் துடிக்க, (அவனை), காயுமது -
வெகுண்டுகொல்வது, கடன் அன்று - செய்யத்தக்க செயலன்று: ஒருபகல்
இருபகல் கழிந்தால் - இன்னும் இரண்டொருநாள்கள் கடந்திட்டால், 'இன்று -
இன்றைத்தினம், நேயமோடு - அன்போடு, வந்து-, - கந்தருவர்-, நேர் பட -
எதிராக நின்று, மலைந்தனர் - பொருதுகொன்றார்கள்', என்னும் - என்கின்ற,
தூய சொல் - பரிசுத்தமான சொல், விளைய - (ஊரில் எங்கும்) பரவுமாறு,
பொருவதுஏ - போர்செய்து கொல்வதே, உறுதி - செய்யத் தக்க செயலாகும்,
என்ன-, அ திரௌபதி - அந்தத் திரௌபதி, சொன்னாள்-: (எ - று.)

     'இன்னே கீசகனுடலந் துணிப்பேன்' என்று வீமன் கூறியதனால், 'கீசகன்
பதைப்பக் காயுமது இந்தக் கங்குலிற் கடனன்று' என்று அவன் கூறியதை
மறுத்து, இரண்டொருநாள் பொறுத்தே ஒருவியாஜம்வைத்து அத்தொழிலை
நிறைவேற்றவேணு மென்றாள் திரௌபதி யென்க.                   (104)

53.-வீமன் அப்பேச்சை அங்கீகரித்து, இனிநிகழ்த்தவேண்டிய
செயலை உபாயம் பொருந்தச் சொல்லி அவ்விரவைமெல்லக்கழித்தல்.

ஐயெனவிவனுந்தன்னைமுன்பயந்தவாரழலனையகற்புடைய
தையறன்மொழியைத்தானுமுட்கொண்டுதகுசெயல்விரகுடன்சாற்றி
வெய்யதன்சினமுந்தன்புயவலிபோன் மேலுறமேலுறவளர
நெய்யுறுகனலிற்பொங்கியக்கங்குனீந்தினான்வேந்தனுக்கிளையோன்.

      (இ -ள்.) தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புஉடைய -
தன்னை முன்னேபெற்ற நிரம்பிய நெருப்புப்போலப் பிறராலணுகவொண்ணாத
கற்பையுடைய, தையல்தன் மொழியை - பெண்ணான திரௌபதியின் பேச்சை,
இவன்உம் - இந்தவீமசேனனும், ஐஎன - ஐயென்று சொல்லி, தானும்-,
உட்கொண்டு - அங்கீகரித்து, (பிறகு), தகு செயல் - (அந்தத் திரௌபதி
சொல்லியவாறு நிகழ்த்தத்) தக்கசெயலை, விரகுடன் - தந்திரமாக, சாற்றி-
சொல்லிவிட்டு,- வெய்ய தன் சினம்உம் - கொடிய தன்கோபமும், தன் புயம்
வலிபோல் - தன்னுடைய தோள்வலிபோல, மேல்உற மேல்உற வளர -
மேலாக மேலாக வளராநிற்க, நெய் உறு கனலின் - நெய்வார்க்கப் பெற்ற
அக்கினிபோல, பொங்கி -, வேந்தனுக்கு இளையோன் - தருமனுக்குத்
தம்பியாகிய அந்தவீமன், அ கங்குல் நீந்தினான் - அவ்விரவை மெல்லக்
கடத்தினான்; (எ - று.)

     'இக்கங்குலில் வலுவில் கீசகனிருக்கு மிடத்துச்சென்று அவனைக்
கொல்லலாகாது: கொன்றால், அஜ்ஞாதவாசகாலம் முடிவதற்குள் நாம்
வெளிப்பட்டு விடுவோ மாதலால், முன்னைய ஏற்பாட்டின்