படி மீண்டும்வனவாசாதிகள் செய்ய நேரிடும்: ஆகவே, அவ்வாறான தொந்தரைக்கு இடமில்லாமல் 'வண்ணமகளின்கணவன்மாரான கந்தருவர் நேரேவந்து மலைந்து கொன்றார்கள்' என்று யாவரும் கருதுமாறு இரண்டொருபகல் கழித்துக் கருதிய தொழிலைச் செய்ய வேணும்' என்று திரௌபதி கூற, வீமனும் அவ்வாறே செய்யலாமென்று உடன்பட்டு, அவள்நினைவுமுற்றுமாறு செய்யப்படவேண்டிய செயலுக்கு உபாயமுங் கூறிவிட்டு, மாற்றானைப் பற்றி நினைக்குந்தோறும் தன்மனத்துச் சினமும் தோள்வலியும் மிகாநிற்க, அன்றையிரவை அரிதிற் கழித்தன னென்பதாம். ஐ - அங்கீகாரக்குறிப்பு: விரைவுக்குறிப்பு என்பாரு முளர். (105) 54.-மற்றைநாளில் பூழிபடிந்தகூந்தலும் கண்ணீர்கலந்த கொங்கையுமாய் அரண்மனையிலிருக்கும் வண்ணமகளினிலையைக்கீசகன் காணுதல். அற்றைநாளிரவிற்றன்பரிதாபமாறியவறிவுடைக்கொடியும், மற்றைநாளந்தச்சுதேட்டிணைகோயின் மன்னவன்மைத்துனன்வரலும், கற்றைவார்குழலிற்பூழியுங்கண்ணீர்கலந்தவான்கொங்கையுஞ் சுமந்தாங்கு, ஒற்றைமென்கொடிபோனின்றனளவனு முளங்கவரவணிலைகண்டான். |
(இ - ள்.) அற்றை நாள் இரவில் - அன்றைத்தினத் திரவில், தன் பரிதாபம் - தன் வருத்தம், ஆறிய - தணியப்பெற்ற, அறிவுஉடை - நல்லறிவையுடைய, கொடிஉம் - கொடிபோன்றவளான திரௌபதியும், மற்றை நாள் - மற்றைநாளிலே, அந்த சுதேட்டிணை கோயில் - அந்தச் சுதேஷ்ணையென்ற மன்னவன்தேவி வசிக்கின்ற அரண்மனையிலே, மன்னவன் மைத்துனன் - விராடமன்னவனுடைய மைத்துனனாகிய கீசகன், வரலும் - வந்தவுடனே,- ஆங்கு - அங்கே, கற்றை வார் குழலில் - தொகுதியான நீண்ட கூந்தலிலே படிந்த, பூழிஉம் - புழுதியையும், கண்ணீர் கலந்த வான் கொங்கைஉம் - கண்ணீர் பொருந்திய பெரிய தனங்களையும், சுமந்து - தாங்கிக்கொண்டு, ஒற்றை மெல்கொடி போல் - ஒரு மெல்லியகொடிபோல, நின்றனள் -; அவன்உம் - அந்தக் கீசகனும், உளம் கவர் - மனத்தைக் கவர் கின்ற, அவள் நிலை-அவ்வண்ணமகளின் நிலைமையை, கண்டான்-; (எ - று.) 'பரிதாபமாறிய வறிவுடைக்கொடி மற்றை நாள் குழலிற் பூழியும் கண்ணீர்கலந்த கொங்கையுஞ் சுமந்து நின்றனள்' என்றதனால், அந்தக் கீசகனோடு சம்பாஷித்தற்காகவே அந்நிலைமையைப் பூண்டாளென்பது பெறப்படும். கொடி - ஆகுபெயர். (106) வேறு. 55.-கீசகன் அவளைக் கண்டதும் காதல்விஞ்சிச் சொல்லத் தொடங்குதல். கலைமதி கண்ட காந்தக்கல்லென வுருகிச் சிந்தை தலைமக னல்லான் வஞ்சந்தனக்கொரு வடிவ மானோன் |
|