பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 69

நிலைபெறு கற்பி னாளை நேருறநோக்கிப் பின்னும்
உலைவுறு காதன் மிஞ்சவுரனழிந் துரைக்க லுற்றான்.

      (இ -ள்.) தலைமகன் அல்லான் - சிறந்தகுணமுள்ள மகனல்லாதவனும்,
வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் - வஞ்சமென்பதே ஒரு
வடிவுபடைத்தாற் போன்றவனுமான கீசகன்,-நிலை பெறு கற்பினாளை-
நிலைத்துள்ள கற்பையுடைய திரௌபதியை, நேர் உற நோக்கி -
நேராகப்பார்த்து,-கலைமதி கண்ட-(பதினாறு) கலைவரையும்
வளருந்தன்மையுள்ள சந்திரன் தோன்றக்கண்ட, காந்தம் கல் என - சந்திர
காந்தக்கல்போல, சிந்தை உருகி - மனமுருகி, பின்உம் - மேலும் [முன்னிலும்
மிகுதியாக], உலைவு உறு காதல் மிஞ்ச-வருந்துதற்குக் காரணமான
ஆசைநோய் விஞ்சாநிற்க, உரன் அழிந்து - மனவலிமை குன்றி, உரைக்கல்
உற்றான் - சொல்லத் தொடங்கினான்; (எ - று.)-கீசகன் உரைக்கலுற்றதை
மேற்கவியிற் காண்க.

     'கலைமதிகண்ட' என்று அடைமொழி கொடுத்ததனால், காந்தம் -
சந்திரகாந்தம் ஆயிற்று.

     இதுமுதற் பதினொருகவிகள் - முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                          (107)

56.-கீசகன் தன்னை மணக்குமாறு காரணங்காட்டிக் கூற,
திரௌபதி சங்கேதமான இடத்தைக் கூறுதல்.

மன்னவன்வாழ்வுமிந்தவளநகர்வாழ்வுமெல்லாம்
என்னதுவலிகொண்டென்பதின்றுனக்கேற்பக்கண்டாய்
உன்னைமெய்காக்குந்தேவருறுதியுமுரனுங்கண்டாய்
என்னைகொல்லினியுன்னெண்ணென் றிருகரங்கூப்பினானே.

      (இ -ள்.) மன்னவன் வாழ்வுஉம் - விராடராசனது நல்வாழ்க்கையும்,
இந்த வளம் நகர் வாழ்வுஉம் - இந்த வளமுள்ள விராடநகரம் (மேம்பட்டு)
வாழ்ச்சி பெற்றிருப்பதுவும், எல்லாம் - ஆகிய யாவும், என்னது வலிகொண்டு
- என்னுடைய வலிமையினாலேயே, என்பது-என்கின்ற இவ்விஷயத்தை, இன்று
- இக்காலத்து, உனக்குஏற்ப - உன் மனத்திற்குத் தெரிய, கண்டாய்-(நீ)
அறிந்துள்ளாய்:  உன்னை மெய்காக்கும் - உன்னுடலைக் காக்கின்ற, தேவர் -
கந்தருவதேவரின், உறுதி உம் - (காக்குந்தொழிலிற் கொண்டுள்ள)
உறுதியையும், உரன்உம் - வலிமையையும், கண்டாய் - கண்டறிந்துள்ளாய்:
இனி-, உன் எண் - உன் கருத்து, என்னை கொல் - யாதோ? என்று -, இரு
கரம் - (தன்) இரண்டுகைகளையும், கூப்பினான் - குவித்து(த் தன்மீது
மனமிரங்குமாறு) வேண்டிக்கொண்டான்; (எ - று.)

     'விராடமன்னவன் பகைவென்று மேம்பட்டிருப்பதும், இந்த நகரம்
மற்றைநகரினும் பகைத்துன்பம் முதலியன இல்லாமல் இனிதிருப்பதும் எல்லாம்
என் வலிமைகொண்டே யென்பது, விராட