னிடத்து நீ முறையிடவும் அவன் என்னைக் கேளாமையால் இனிது விளங்கும்: அன்றியும், என்வலிமைக்கு முன்னே அஞ்சியதனால்தான் உன்மெய்காக்குந் தேவரும் என்னை இப்போது உபேட்சித்திருக்கின்றன ரென்பதும் நீ ஆராய்ந்து தெளியலாம்: இந்நிலையில், இனி உன் எண்ணம் என்னையோ? என்மீது மனமிரங்குவாய்,' என்று கீசகன் திரௌபதியைக் கைகூப்பித்தொழுதா னென்பதாம். எண் = எண்ணம்: கருவிப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட பெயர். (108) 57, 58.- இரண்டுகவிகள் ஒருதொடர்: திரௌபதி கீசகனிடம் முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத் தெரிவிக்கும். கருத்தினிமுடியுமென்றுகடுங்கனன்முகத்திற்றோன்றுந் திருத்தகுபாவையந்தத்தீயவன்றன்னைநோக்கி வருத்தநீயுறவுமுன்னர்மறுத்தனன்மரபினாலும் சரித்திரத்தாலுங்கொண்டதவவிரதத்தினாலும்,
கந்தருவருமற்றென்னைக்காப்பதுமறந்தார்போலும் இந்திரனெனினுமாதரெளிமையினொருப்பட்டெய்தார் புந்தியிலொன்றுங்கொள்ளேலாரிருட்பொழுதிலின்று சந்தணிகுவவுத்தோளாய்தனித்துநீவருதியென்றாள். |
(இ -ள்.) (57) கடுங் கனல் முகத்தில் தோன்றும் - கொடிய அக்கினியின்முகத்திலிருந்து தோன்றிய, திரு தகு பாவை - அழகு தக்கிருக்கப்பெற்றபதுமைபோன்றவளான திரௌபதி, இனி கருத்து முடியும் என்று-'இனி (தான்எண்ணிய) எண்ணம் [கீசகவதை] (இனிது) நிறைவேறும்' என்று நினைத்து,அந்த தீயவன் தன்னை நோக்கி -(பிறன்தாரத்தை நச்சுதலாகிய) தீயகுணத்தையுடையவனான அந்தக்கீசகனைப் பார்த்து,-'நீ-, வருத்தம் உறஉம் - (என்னைப்பெறும்பொருட்டு) வருத்தமடையாநிற்கவும், மரபினால்உம் - (நான்) பிறந்தகுலத்தினாலும், சரித்திரத்தால்உம் - (மேற்கொண்ட) நல்லொழுக்கத்தினாலும்,கொண்ட தவவிரதத்தினால்உம் - மேற்பூண்ட தவவொழுக்கத்தினாலும்,முன்னர் - முன்பு, மறுத்தனன் - (உன்கருத்திற்கு இசையாது) மறுத்தேன்: (மேலும்) (58) கந்தருவர் உம் - (என்னைக் காவல்புரியும்) கந்தருவர்களும்,என்னை -, காப்பது- காத்தற்றொழிலை, மறந்தார்போலும்-: (மற்றும்), இந்திரன் எனின்உம் - (தம்மைக் காதலிப்பவன்) தேவேந்திரனே யானாலும், மாதர் - மகளிர், எளிமையின் - இலேசில், ஒருப்பட்டு எய்தார் - இசைந்து வந்துவிடமாட்டார்கள்: (ஆகவே நான் முன்பு மறுத்து உன்னை உபேட்சித்துச் சொன்னேன்: அங்ஙன் சொன்னதற்காக), புந்தியில் - (உன்) கருத்திலே, ஒன்றுஉம் கொள்ளேல் - ஒன்றும் வைத்துக்கொள்ளாதே: சந்து அணி குவவு தோளாய் - சந்தனக்குழம்பை யணிந்த திரண்ட தோள்களையுடையவனே! இன்று - இன்றைத்தினம், ஆர் இருள் பொழுதில் - நிரம்பிய இருளைக் |