கொண்டஇரவிலே, நீ -, தனித்து-, வருதி - வருவாய்' என்றாள்-என்று கூறினாள்; (எ - று.) திரௌபதி கீசகனைத் தான் சேர முதலில் மறுத்ததற்குக் காரணம்- தன்மரபு சரித்திரம் [கற்புநெறிவழுவாது நடக்கை] ஐம்பொறிகளைக் கண்டபடி போகவொட்டாது நிறுத்திவைக்குங்கொள்கை என இவை முக்கியமானவை: இவை 57-ஆஞ் செய்யுளிற் கூறப்பட்டன: மற்றும் 58-ஆஞ் செய்யுளிலே கந்தருவர் தன்னைப் பிற ஆடவர் காதலித்து வலிய மணக்காதபடி பாதுகாப்பரென்று கருதியிருப்பதாக நடித்தமை நான்காம் காரணம். மேலும் "இந்திரனெனினும் மாதர் எளிமையினொருப்பட்டெய்தார்" என்பது மற்றொரு காரணம்; ஆக, இவ்வைந்தும் காரணங்கள்: இப்போதுதான் கீசகனைச்சேர உடன்படக்காரணம், இவ்வைந்தில் அச்சாணி போன்ற காரணம் தப்பினமையே யென்றற்காக "கந்தருவருமற்றென்னைக்காப்பது மறந்தார்போலும்" என்று வஞ்சகமாகக் கற்பித்துக்கொண்டு கூறுகின்றாளென்க. இங்குள்ள நான்காங்காரணம் 58-ஆஞ்செய்யுளின் முதலடியால் ஊகிக்கப்படுவதாகும். தனித்து வருதியென்று கூறியவள் இன்னவிடத்துவருக என்று குறியிடத்தை மேற்செய்யுளிற் கூறுவள். மற்றென்னை, மற்று - வினைமாற்று. (107) 59.-திரௌபதி கீசகனுக்குக் குறியிடங் கூறுதல். அக்கொடியுரைத்தமாற்றமவன்செவிக்கமுதமாகிப் புக்குயிர்நிறுத்திமெய்யும்புளகெழவிளகிநெஞ்சம் மிக்கதோர்வேட்கைகூரவிடுத்தலின்வேந்தன்கோயிற் கொக்கின்மேற்குயில்கள்கூவுங்குளிர்பொழிற்குறியுஞ்சொன்னாள். |
(இ -ள்.) அ கொடி உரைத்த மாற்றம் - கொடிபோன்றவளான அந்தத் திரௌபதி கூறிய சொல், அவன் செவிக்கு - அந்தக்கீசகனுடைய காதுக்கு, அமுதம் ஆகி புக்கு - அமுதமயமாய் (ச் செவி வழியாக உள்ளே) புகுந்து, உயிர் நிறுத்தி - (தவித்துக்கொண்டிருந்த அவனுடைய) பிராணனை நிலைத்திருக்கச்செய்து, (அதனால்), மெய் புளகு எழஉம் - அவனுடம்பு மயிர்க்கூச்சு எறியவும், நெஞ்சம் இளகி மிக்கது ஓர் வேட்கை கூர(உம்) - மனங்குழைந்து மிகுந்ததான ஒப்பற்ற ஆசை விஞ்சவும், விடுத்தலின் - செய்ததனால்,-(அப்போது வண்ணமகளாகிய திரௌபதி), வேந்தன் கோயில் - அரசனுடைய அரண்மனையைச் சார்ந்துள்ள, கொக்கின்மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் - மாமரத்தின்மீது குயில்கள் கூவாநிற்கும் குளிர்ந்த சோலையாகிய, குறிஉம் - குறியிடத்தையும், சொன்னாள்-; (எ - று.) நர்த்தனசாலையைக் குறியிடமாகக் கூறினாளென்று முதனூலிலுள்ளது: பொழிலிடத்துக் கூடுவரென்று தமிழ்நூல்களிற்பயிலுவதால், நூலாசிரியர் குளிர்பொழிற் குறியுஞ் சொன்னாளென்று முதலிற்கூறி, மேற்செய்யுளில் இன்பமண்டபத்து வம்மின் |