கையினால்,அடு-அடுகின்ற, தொழிற்கு-செய்கையில், உரிய-உரிமை பூண்ட, செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் - செம்பொன் மயமான மேருமலை இரண்டையொத்த தோளையுடையவனான வீமன்,-உடு முகத்தின் - நட்சத்திரங்களைத் தன்னிடத்திலேயுடைய, மைவானம் - கருநிறமாகத் தோன்றுகின்ற ஆகாயம், ஒளி அற இருண்ட-ஒளியற்று இருண்டுகிடக்கிற, கங்குல்-இராப்போதானது, நடுஉறு - நடுப்போதான [அர்த்தராத்திரியாய் விட்ட],அ பொழுதில் - அந்த வேளையிலே, செவ்வி நவ்வியர் - அழகிய மான்போன்ற கண்களையுடையரான பெண்டிரின், கோலம் - அலங்காரத்தை [பெண் வேடத்தை], கொண்டான் - மேற்கொண்டான்; (எ - று.) அடுதொழில் என்பது - இரட்டுறமொழிதலால், சமைத்தல் கொல்லுதல் என்ற இருபொருளைத் தந்தது. உடுமுகத்து இன்மை-நட்சத்திரங்கள் தம்மிடத்து இல்லாமையால் என்று கூறினாரு முளர்: இது எவ்வாறு பொருந்துமென்பது புலப்பட வில்லை. உடுமுகத்தின் என்று வானத்திற்கு அடைமொழி கொடுத்தமையால், ஒளியையுண்டாக்கும் சந்திரனைப் பெற்றிருக்கவில்லை அக்கங்குற்போது என்பது பெறப்படும். மை, வானத்திற்கு இயற்கை யடைமொழி. நடுவுற பொழுதில் என்றுபிரித்தலும் உண்டு. (115) 64.-குறித்தபொழிலிடையே திரௌபதியுடன் வீமன் பெண்கோலத் தோடுசென்று கீசகன்வருகையைநோக்கியிருத்தல். அங்கியிற்றோன்றுநாளாயணியுடனள்ளிக்கொள்ளப் பொங்கியவிருளின்முன்னம்புகன்றவப்பொங்கரூடு தங்கியதவளமாடந்தன்னிடைப்புகுந்துசான்ற இங்கிதத்துடனேநோக்கியிருத்தனனிமைப்பிலாதான். |
(இ -ள்.) (அங்ஙனம் மாதரார்கோலம் பூண்ட வீமன்),-அங்கியில் தோன்றும் நாளாயணியுடன் - நெருப்பினின்று தோன்றிய நாளாயணியென்பாளுடனே, அள்ளிக்கொள்ள பொங்கிய இருளின் - அள்ளிக்கொள்ளலாம்படி மிகச் செறிந்த இருட்டிலே, முன்னம் புகன்ற அ பொங்கரூடு-முன்பு கூறிய அந்தச் சோலையிலே, தங்கிய - பொருந்திய, தவளம் மாடந்தன்னிடை - வெண்ணிற மாடத்திலே, புகுந்து - போய்ச்சேர்ந்து, சான்ற இங்கிதத்துடன் - மிக்க கவனத்தோடு, இமைப்பு இலாதான் - கண்கொட்டாதவனாய், நோக்கி இருந்தனன் - (கீசகன்வருகையை) எதிர்பார்த்திருந்தான்; (எ - று.) நாளாயணியென்பது - மௌத்கல்யமுனிவரின் பார்யையான இந்திரசேனையின் பெயர்: இவளே பிறகு திரௌபதியாகப் பிறந்தாள். இந்தச் சரித்திரத்தை ஆதிபருவத்துத் திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 72- ஆஞ்செய்யுட்குமேல் காண்க. அள்ளிக்கொள்ளப் பொங்கிய விருள் - தன்மைத்தற்குறிப்பேற்றம். இங்கிதம் - (பிறனிடம் தோன்றுகின்ற) குறிப்பு; மிக்க கவனம் என்றபொருளை இங்கு |