பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 75

இலக்கணையால் தந்தது.  தங்கிய கனகமாடந்தன்னிடை யென்று பிரதிபேதம்.   

(116)

65.-திரௌபதியைஒருபுறத்தில் மறைத்துவைத்திட்டு
வீமசேனன்இருக்க, கீசகன்அப்பொழிலூடு சேர்தல்.

அணங்கனசாயலாளையப்புறங்கரந்துவைத்து
மணங்கமழலங்கன்மார்பன்மண்டபத்திருந்தகாலைப்
பிணங்கலனணிந்ததன்னபேரெழிற்பெற்றியானெஞ்ச
உணங்கநாப்புலரவந்தவ்வுயர்பொழிலூடுசேர்ந்தான்.

      (இ -ள்.) அணங்கு அன - தெய்வப்பெண்போன்ற, சாயலாளை -
மென்மையான அழகையுடைய திரௌபதியை, அப்புறம் - அங்கு ஒருபுறமாக,
கரந்து வைத்து - மறைந்திருக்குமாறு வைத்திட்டு,-மணம் கமழ் அலங்கல்
மார்பன் - நறுமணம் வீசுகின்ற மலர்மாலையை யணிந்த மார்பையுடையனான
(பெண்வேடம்பூண்டிருந்த) வீமன், மண்டபத்து இருந்த காலை - மண்டபத்தி
லிருந்தபோது,-பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் -
பிணத்துக்கு அணிகல னணிந்தாற்போன்று அலங்காரத்தாற் பேரெழில்படைத்த
தன்மையுடையனான அந்தக்கீசகன், (காமதாபத்தால்), நெஞ்சு உணங்க -
இதயம் வாடவும், நா புலர - நாக்குவரளவும், வந்து-, அ உயர் பொழிலூடு -
ஓங்கிய மரங்களைக்கொண்ட அந்தச்சோலையிலே, சேர்ந்தான்-; (எ - று.)-
கவிஞர் கீசகனிடத்து அவனது ஒழுக்கக்கேட்டாற் கொண்ட அவமதிப்பினாலும்,
விரைவில் அந்தக் கீசகன் பிணமாகக்கிடக்கப்போவதனாலும், அவனை,
'பிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான்' என்றது.             (117)

வேறு.

66.-அம்மாளிகையிற்பொற்றுணைச்சேர்ந்திருந்த பெண்ணுருவைக்
கண்ட கீசகன் ஆர்வங்கொண்டுகூறலுறுதல்.

சாந்தினான் மெழுகிய தவளமாளிகை
ஏய்ந்தபொற் றூணிடை யிலங்குமின்னெனச்
சேர்ந்துறை பெண்ணுருக் கண்டுசிந்தையிற்
கூர்ந்தபே ரார்வமோடிறைஞ்சிக் கூறுவான்.

      (இ -ள்.) சாந்தினால் - (அரைத்த) சுண்ணாம்பினால், மெழுகிய-
பூசப்பெற்றுள்ள, தவளம் மாளிகை - வெண்ணிறமுள்ள மாளிகையிலே, ஏய்ந்த-
பொருந்திய, பொன் தூண்இடை - பொற்கம்பத்தினிடத்தை, இலங்கும் மின் என
சேர்ந்து-விணங்குகின்ற மின்னல் போலச் சார்ந்து, உறை-வசிக்கின்ற, பெண்
உரு-பெண்வடிவத்தை, கண்டு-பார்த்து,(கீசகன்), சிந்தையில் கூர்ந்த பேர்
ஆர்வமோடு - மனத்திலே மிகுந்த காதலோடு, இறைஞ்சி - வணங்கி,
கூறுவான் - (பின்வருமாறு) சொல்லலானான்; (எ - று.)-கீசகன் ஆர்வமோடு
கூறுவதை மேற்கவியிற் காண்க.