கழிபடருற்றது- மிக்கதுன்பத்திற்குக் காரணமாகப் பொருந்தியது எனினுமாம். எதிர்புகுதல் - நோக்கிற்கெதிர்சென்று புகுதல்என்றனர், ஐங்குறுநூற்றுரைகாரர். (122) 71.-இரண்டுகவிகள் -ஒருதொடர்: பெண்ணுருக்கொண்டவீமன் கீசகனை நகைத்துநோக்கிஇருகைகளாற் பற்றியமை கூறும். கீசகனிம்முறை கிளந்தபற்பல வாசகங்கேட்டலுமலங்கொணெஞ்சுடைப் பூசகர்பூசைகொள் ளாதபுன்பவ நாசகக்கடவுள்போனகைத்துநோக்கியே. |
(இ -ள்.) கீசகன்-, இ மறை-இப்படியாக, கிளந்த-கூறிய, பல்பல வாசகம்-மிகப்பலவான காதற்குறிப்புள்ள வார்த்தைகளை, கேட்டலும்- கேட்டவுடனே,-மலம் கொள் நெஞ்சுஉடை பூசகர் பூசை கொள்ளாத - அபரிசுத்தியைக்கொண்ட நெஞ்சத்தையுடைய பூசகரின் பூசையை யேற்றுக்கொள்ளாத, புல் பவம் நாசகம் கடவுள் போல் - புல்லியபிறவியை(த் தன்னையடைந்தார்க்கு)ப் போக்கவல்ல கடவுளைப்போல, நகைத்து நோக்கி- சிரித்து (அந்தக்கீசகனைப்) பார்த்து,-(எ-று.) -'பெற்றமாமகன் பொறிவந்திட இருகை பற்றினான்' என்று மேற்கவியில்முடியும்.
திரிபுரசங்காரகாலத்திற் சிரித்து எதிரிகளை யழித்த கடவுள் சிவபிரானே யாதலால், புன்பவநாசகக் கடவுள் என்பது அக்கடவுளையே காட்டும். "ஸங்காரத் ஜ்ஞாந மந்விச்சேத்" என்றது காண்க. நகைத்துநோக்கி என்பதற்கு, மேற்செய்யுளில்வரும் பெற்றமாமகன் என்பது எழுவாய். மலம்-ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலமுமாம். (123) 72. | பெண்ணுடையுருக்கொளும்பெற்றமாமகன் கண்ணுடைப்பொறியெழுங்கனலின்வந்திட மண்ணுடைக்காவலன்மைத்துனன்றனை எண்ணுடைக்கைகளாலிருகைபற்றினான். |
(இ -ள்.) பெண்உடை உரு கொளும் - பொண்ணினுடைய உருவத்தைக் கொண்ட, பெற்றம் மா மகன் - வாயுவின் சிறந்த குமாரனான வீமன், கண் உடை - இருகண்களும் கொண்டுள்ள, பொறி - (கோபாக்கினியின்) பொறிகள், எழும் கனலின் வந்திட - கொழுந்துவிட்டெரியும் அக்கினியினின்று புறப்படுவனபோல வெளிப்படாநிற்க,-மண் உடை - மச்சநாட்டிற்குஉரிய, காவலன் - அரசனான விராடனுடைய, மைத்துனன் தனை - மனைவியின் உடன் பிறந்தவனான கீசகனை, எண்உடை கைகளால் - (வலிமையினால்) மதிப்பையமைந்த இரண்டு கைகளால், இரு கை பற்றினான் - (கீசகனுடைய) இரண்டுகைகளையும் பிடித்துக்கொண்டான்; (எ - று.) ஒருபெண் தன்னைக் கைப்பற்றுகின்றாளென்று அந்தக்கீசகன் குதூகலமாக இருக்க, ஒருகையாற் பற்றுதற்குப்பதில் இருகை |