பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 79

களாலும்இறுகப்பற்றினான் வீம னென்பதாம்.  எண் - ஏண் என்பதன்
விகாரமெனின், வலிமையென்று பொருளாம்.                       (124)

73.-வீமன் கீசகன்திறத்துக்கருதிய செயலைமுடிக்கத்
தொடங்குதல்.

பற்றினான்பற்றியபாணியாலெழச்
சுற்றினான்கறங்கெனத்தூணமொன்றினோடு
எற்றினான்சென்னியையெடுத்ததன்வினை
முற்றினானெடும்பெருமூச்சனாகியே.

      (இ -ள்.) பற்றினான் - (அந்தக்கீசகனைத் தன்னிருகைகளாலும் வலியப்)
பிடித்தான்: பற்றிய பாணியால் - (தான்) பிடித்த கைகளினால், கறங்கு என எழ
சுற்றினான்-காற்றாடிபோல (வானத்தின் மீதே) எழ(அந்தக்கீசகனை)க் கறகற
வென்று சுழற்றினான்: தூணம் ஒன்றினோடு சென்னியை எற்றினான் -
(ஆங்கிருந்ததொரு) கம்பத்தில் அவன் தலையை மோதினான்: நெடும் பெரு
மூச்சன் ஆகி-மிகப்பெருமூச்சுடையனாய், (அவ் வீமன்), எடுத்த தன் வினை
முற்றினான்-மேற்கொண்ட தன் செயலை நிறைவேற்றலானான்; (எ - று.)

     மேற்கொண்டசெயல் - கீசகவதம்.  இச்செய்யுளிற் பற்றினானென்றது -
கீழ்ச்செய்யுளின் அனுவாதம்.                                   (125)

74.-வீமனைக் கீசகன்மாறிமோத வீமன்
கீசகனைத் தள்ளிவீழ்த்துதல்.

வீமனைப்பிடித்தகைவிலக்கிமற்றவன்
மாமுகத்திருகையுமாறிமோதினான்
தீமுகத்தவனையச்செம்மன்மீளவும்
சாமுகத்தவனெனத்தள்ளிவீழ்த்தினான்.

      (இ -ள்.) வீமனை -, பிடித்த கை விலக்கி - (தன்னைப்) பற்றியுள்ள
கைகளை விலக்கிவிட்டு, மற்று-பின்பு, அவன் - அந்தக் கீசகன், மா முகத்து -
பெரிய (வீமனுடைய) முகத்திலே, இருகைஉம் - (தன்னுடைய) இரண்டு
கைகளையும், மாறி - (முன்னையநிலை) மாறி, மோதினான் - தாக்கினான்: அ
செம்மல்-செம்மைக்குணமுடையனாகிய அந்த வீமசேனன், தீ முகத்தவனை -
தீமைக்கு இருப்பிடமான அந்தக்கீசகனை, மீளஉம் - மறுபடியும், சா
முகத்தவன் என - (கண்டவர் யாவரும்) சாமூஞ்சிபட்டவன் (இவன்) என்று
கருதுமாறு, தள்ளி-, வீழ்த்தினான் - விழச்செய்தான்; (எ - று.)

      வீமன்வீழ்த்தியதனால் கீசகனுக்கு முன்னிருந்த வீரப்பொலிவுமாறி,
முகம்சாமூஞ்சிபட்டதென்க.                                   (126)

75.-ஐந்து கவிகள் - வீமகீசகயுத்தம் கூறும்.

ஓரொருகுத்தொருவுருமுவீழ்ந்தென
மேருவோடொத்ததோள்வீமன்குத்தலும்