பக்கம் எண் :

80பாரதம்விராட பருவம்

ஈரிடத்தினும்விலாவெலும்புநெக்கன
கூருகிர்த்தலங்களாற்குருதிகக்கவே.

      (இ -ள்.) கூர் உகிர் தலங்களால் - கூரிய நகத்தோடு கைத்தலங்கள்
பட்டதனால், குருதி கக்க - இரத்தத்தை வெளிப்படுத்துமாறு, ஓர் ஒரு குத்து-
ஒவ்வொருகுத்தும், ஒரு உருமு வீழ்ந்தென - ஒருஇடி விழுந்தாற்போல வீழ,
மேருவோடு ஒத்த தோள் - மேருவோடொத்த தோள்களையுடைய, வீமன்-,
குத்தலும்-குத்தவே,-(கீசகனுக்கு), ஈர் இடத்தின்உம்- இரண்டுபுறத்தும், விலா
எலும்பு-விலாப்புறமுள்ள எலும்புகள், நெக்கன-பிளந்து விண்டன; (எ-று.);-
குத்தெரியுருமு என்றும், கூருகிர்த்தலைகளால் என்றும் பிரதிபேதம்.   (127)

76,கேளொடுகெடுதரு கீசகன்கழல்
தாளொடுதாளுறத்தாக்கிமற்கெழு
தோளொடுதோளுறத்தோய்ந்துகன்னல்வில்
வேளொடுவருநலம்விஞ்சமேவினான்.

      (இ -ள்.) கேளொடு - சுற்றத்தாருடனே, கெடுதரு - அழியப்போகின்ற,
கீசகன் - கீசகனானவன்,-கழல் தாளொடு-வீரக்கழலையணிந்த (வீமன்)
பாதங்களுடனே, தாள் உற - (தன்) தாள்கள் பொருந்த, தாக்கி - மோதியும்,
மல் கெழு - வலிமை விளங்குகின்ற, தோளொடு - (தன்) தோளுடனே, தோள்
- (வீமன்) தோள்கள், உற - பொருந்த, தோய்ந்து - படிந்தும், கன்னல் வில்
வேளொடு வருநலம் விஞ்ச - கரும்புவில்லையேந்திய மன்மதனால் வருகிற
இன்ப நலமும் விஞ்சும்படி, மேவினான்-(மற்போரினால்) தழுவினான்; (எ - று.)

     காமவின்பம் நுகர்கையில் தாளொடு தாளும் தோளொடு தோளும்
தாக்கிப்பொருந்தல் நிகழு மாதலாலும் இந்த மற்போரிலும் அச்செயல் மிக
நிகழ்தலாலும், 'வேளொடுவருநலம் விஞ்ச மேவினான்' என்றார்: இச்செய்யுளில்
'வேளொடு வருநலம் விஞ்ச மேவினான்' என்றது, வீமன் செயலை யென்றலும்
ஒன்று.                                                     (128)

77.தாழ்வரைத்தடக்கையாற்றையலாளெதிர்
காழ்வரப்பொருதிறற்காளைதன்னையும்
சூழ்வரச்சூறையிற்சுற்றிப்பார்மிசை
வீழ்வரப்புடைத்தனன்மிடலில்விஞ்சினான்.

      (இ -ள்.) மிடலில் விஞ்சினான்-வலிமையில் விஞ்சினவனாகிய கீசகன்,-
வரை தாழ் தட கையால் - வரைபோன்றனவும் தொங்குவனவுமான பெரிய
கைகளால், தையலாள் எதிர் - திரௌபதியின் எதிரிலே, காழ் வர - உறுதி
பொருந்த, பொரு - போர்செய்கின்ற, திறல் - வல்லமையையுடைய, காளை
தன்னைஉம் - இளவெருது போன்றவனான வீமனையும், சூறையின் -
சுழல்காற்றிலகப்பட்டாற்போல, சூழ்வர சுற்றி - மண்டலமாகப் பொருந்தச் சுற்றி,
பார்மிசை வீழ்வர - பூமியில் விழுமாறு, புடைத்தனன்-மோதினான்; (எ - று.)