பக்கம் எண் :

82பாரதம்விராட பருவம்

உம் -(போரிலுள்ள) உத்ஸாஹமும், நாம் செப்பற்பாலஓ - நம்மாற் சொல்லுந்
தரத்தவோ? மிகுசூரம்உம் - மிக்க சூரத்தனமும், செற்றம் உம் - பகைமையும்,
உடைய-, தோன்றல் - வீரனான வீமன், 'நிசைநேரம்உம் சென்றது -
இரவின்நேரமும் வெகுவாகக் கழிந்திட்டது,' எனா - என்று கருதி,- (எ - று.) -
"மன்னவன் மைத்துனன் மார்பொடிந்திட, ஒன்றிட, தாக்கி, சுருக்கினான்" என
மேலிற் கவியில் முடியும். 

      தெளிவு- போரிலுள்ள தெளிவான ஞானமுமாம்.  நிசை = நிஸா:
வடசொல்.                                                  (132)

81.-இரண்டுகவிகள்-கீசகனுடலைத் தசையின்மலையெனத்
தோன்றச்சுருக்கி வீமன்அவனாவியைப் போக்கினமை
கூறும்.

மன்னவன்மைத்துனன்மார்பொடிந்திடச்
சென்னியுந்தாள்களுஞ்சேரவொன்றிடத்
தன்னிருசெங்கையாற்றாக்கிவான்றசை
துன்னியமலையெனச்சுருக்கினானரோ.

      (இ -ள்.) மன்னவன் மைத்துனன் - விராடமன்னவனுடைய
மைத்துனனாகிய கீசகனுடைய, மார்பு-, ஒடிந்திட-ஒடியவும், சென்னிஉம்
தாள்கள்உம் சேர ஒன்றிட - சிரசும் பாதங்களும் ஒன்றுபடச் சேர்ந்திடவும்,
(வீமன்), தன் இரு செங்கையால் தாக்கி - தன்னுடைய இரண்டு செவ்விய
கைகளாலும் மோதி, வான் தசை துன்னிய மலைஎன-மிக்கசதை நெருங்கிய
குன்று என்று (கண்டவர்) சொல்லும்படி, சுருக்கினான் - (பரவியிருந்த
அவனுடலைச்) சுருங்குமாறு பிடித்து வைத்தான் ; (எ - று.)

      கைகால் சென்னி முதலியவை ஒன்றுந் தெரியாது மாமிசபருவதமென்று
ஒன்றுதான் தோன்றும்படி கீசகனுடைய உடலத்தை அடக்கியதனால், சுருக்கினா
னென்றார்.  சென்னி தாள்களைக்கூறியது, கைக்கும் உபலட்சணம்: 84-ஆங்
கவியைக் காண்க. அரோ-ஈற்றசை.

82.மாற்றினானவன்பெருமையலாவியைக்
கூற்றினார்கைக்கொளக்கொடுத்துத்தன்சினம்
மாற்றினானத்திறலார்கொல்வல்லவர்
காற்றினால்வருதிறற்காளையல்லதே.

      (இ -ள்.) அவன் - அந்தக் கீசகனுடைய, பெரு மையல் ஆவியை -
மிக்க காமமோகங்கொண்ட உயிரை, மாற்றினான்-(உடம்பினின்று)
வேறுபடுத்தினவனாய், கூற்றினார் கைக்கொள கொடுத்து-யமன் கையினாற்
பெற்றுக் கொள்ளும்படி கொடுத்து, (வீமன்), தன் சினம் மாற்றினான் - தன்
கோபத்தைப் போக்கினான்: காற்றினால் வருதிறல் காளை அல்லது-
வாயுதேவனா லுண்டாக்கப்பட்டுத் தோன்றிய வலிமையுள்ள இளவெருதுபோன்ற
வீமசேனனை யல்லாமல், அ திறல்