பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 83

யார் கொல்வல்லவர் - அந்தப்பராக்கிரமச் செயலைச் செய்யவல்லவர்
வேறுயாவருளர்? (எ - று.)-மூன்றாமடியில், ஆற்றினான் என்றும் பிரிக்கலாம்.
                                                        
(134)

83.- கீசகனை வீமன்வதைத்ததைப் பற்றிய கவிக்கூற்று.

பண்ணியவினைகளின்பயனலாதுதாம்
எண்ணியகருமமற்றியாவரெய்தினார்
திண்ணியகீசகன்செய்ததீங்கிவன்
புண்ணியமானதாற்புகல்வதென்கொலாம்.

      (இ -ள்.) பண்ணிய-(அவரவர்) செய்த, வினைகளின்-புண்ணியபாவ
ரூபமான செய்கைகளின், பயன் அலாது - பயனை அடைவதல்லாமல், தாம்
எண்ணிய கருமம் - தாம் நினைத்த செயலை, மற்று-வினைப்பயனுக்குமாறாக,
எய்தினார் யாவர்-(தாம் நினைத்தபடி) அடைந்தவர் யாவர்? திண்ணிய கீசகன்
- வலிமையுள்ள கீசகன், செய்த-, தீங்கு - தீச்செயல், இவன் - இந்த
வீமசேனனுக்கு, புண்ணியம் ஆனது - நல்வினைப்பயனைத் தருவதாக
ஆயிற்று; புகல்வது என்கொல் - (இதுபற்றி நாம் வேறு) சொல்லத்தக்கது யாது?
(எ - று.)

     கீசகன் திரௌபதியைச் சேரக்கருதிவந்தது தீச்செய லாதலால்
அத்தீவினைப்பயன் அவனை யழிக்க, அதுவே வீமனுக்கு வெற்றியைத் தரும்
புண்ணியப்பயனாக இருந்த தென்று, கவி, உலகோருக்கு ஒருநீதியை இதனாற்
கற்பிக்கின்றன ரென்க.  முதலிரண்டடிகட்கு - கீசகன் தான் செய்த
வினைப்பயனை யடைந்தானேயன்றி, எண்ணிய பயனைப் பெறவில்லையென்க.
ஆல் - தேற்றம்.  ஆம் - அசை.                                 (135)

84.-கீசகனுடலைக் கால் தலைஎன்று தெரியாதபடி
சுருக்கினபின்பு
திரௌபதியைவீமசேனன் அழைத்தல்.

செங்கைகாலுடலொடுசென்னிதுன்றிட
அங்கையாலடக்கிநின்றநேகமாயிரம்
வெங்கையானையின்மிடல்வீமன்வெற்பன
கொங்கையாடன்னையுங்கூவினானரோ.

      (இ -ள்.) செம் கை - செந்நிறமுள்ள கை, கால்-, உடலொடு-உடல்,
சென்னி - தலை என்ற இவைகள் யாவும், துன்றிட - ஒன்றுபட்டுச் சேர, வெம்
கை அநேகம் ஆயிரம் யானையின் மிடல் வீமன் - விரும்பத்தக்க
துதிக்கையையுடைய அனேகவாயிரம் யானைகளின் வலிமையைப்படைத்த
வீமசேனன், அம் கையால் அடக்கிநின்று - (தன்னுடைய) அழகிய கையாற்
சுருக்கி, வெற்புஅன கொங்கையாள் தன்னைஉம் - மலையையொத்த
தனங்களையுடையளான திரௌபதியையும், (அதனைக்காட்டும்பொருட்டு),
கூவினான்-அழைத்தான் ; (எ - று.) - அரோ - ஈற்றசை.'           (136)