கதைவலான்வெங்கடுங்கொடுங்கைகளால் வதைசெய்தம்முன்வடிவுகண்டார்களே. |
(இ -ள்.) சுதை நிலா ஒளி சூழ்-சுண்ணச்சாந்தின் வெண்ணிறவொளி சூழப்பெற்ற, மண்டபத்திடை - மண்டபத்திலே, சிதையும் மெய்யொடுஉம் - (உறுப்புக்கள் தெரியாது) சிதைந்துள்ள உடம்புடனேகூடிய, கதை வலான் வெம் கடுங் கொடுங் கைகளால் வதைசெய் - கதாயுதத்தில்வல்லவனான வீமசேனனுடைய வெவ்விய மிகக்கொடிய கைகளாற் கொல்லப்பட்ட, தம் முன் வடிவு - தமது அண்ணனுடைய வடிவத்தை, (அந்த உபகீசகர்கள்), செம்பொன் சிலம்பு என - மேருமலைபோல(த் தோன்ற), கண்டார்கள்-: (எ - று.) 95.-சுதேஷ்ணைக்குக் கீசகன்மாண்ட செய்தியைக் கூறிப் புலம்பி விட்டு, உபகீசகர், அயலறியாமல்அவனுடலைச் சுட்டெரிக்க எண்ணுதல். பழுதுடைப்பெரும்பாதகன்மாண்டமை தொழுதுரைத்துச்சுதேட்டிணைதன்னொடும் அழுதரற்றி யயலறியாவகை எழுதழற்கணிடுவதற்கெண்ணினார். |
(இ -ள்.) பழது உடை - குற்றமுள்ள, பெரும் பாதகன் - (பரதாரத்தை விரும்புதலாகிய) பெரும்பாதகத்தைச் செய்தவனாகிய கீசகன், மாண்டமை - இறந்துவிட்டதை, சுதேட்டிணை தன்னொடுஉம் - சுதேஷ்ணையினிடத்து, தொழுது உரைத்து-வணங்கிச் சொல்லி, (அந்த உபகீசகர்கள்), அழுது அரற்றி - புலம்பி வாய்விட்டுக்கதறி, (பிறகு), அயல் அறியா வகை - பிறர்க்குத் தெரியாதபடி, எழு தழற்கண் - பற்றியெரிகின்ற நெருப்பிலே, இடுவதற்கு- (அவ்வுடலை) இட்டுச் சுட்டெரிப்பதற்கு, எண்ணினார் - நினைத்தார்; 96.-உபகீசகர்தம்அண்ணனுடலுடன் அவனது மரணத்திற்கு ஏதுவான வண்ணமகளையுமஉடனிட்டெரிக்க நிச்சயித்தல். எண்ணிலாமனத்தெம்முனையெண்ணுடை விண்ணுளார்சிலர்வீத்ததற்கேதுவாம் வண்ணமாமகடன்னையும்வன்னியால் அண்ணலோடு மடுதுமென்றார்களே. |
(இ - ள்.) 'எண் இலா மனத்து - (பிறவீரரை) மதித்தலில்லாத மனத்தை யுடைய, எம்முனை - எமக்கு முன்பிறந்தவனான [அண்ணனான] கீசகனை, எண்உடை விண்உளார் சிலர்-மதிப்புள்ள தேவவருக்கத்தைச் சேர்ந்த சிலர், வீத்ததற்கு - கொல்லுதற்கு, ஏது ஆம் - காரணமாக விருந்த, வண்ணமாமகள் தன்னைஉம் - வண்ணமகளாகத் தொழில்புரிபவளையும், அண்ணலோடுஉம் - பெருமைவாய்ந்த அண்ணனுடனே, வன்னியால் - ஈமவெரியாலேயே, |