பக்கம் எண் :

90பாரதம்விராட பருவம்

லிக்கொண்டே,- கண் வார் புனல்  சோர - கண்களினின்று  மிக்க நீர்
பெருக,- (எ -று.)-'அல்லல்கூரவரற்றினள்' என்று கீழிற்கவியில் முடியும்.150)

99.-அதுகேட்டுப் பெரும்போர்புரிய வீமன் அங்கு
விரைந்துஓடுதல்.

மடைப்பெரும்பள்ளியெய்தியமாருதி
கிடைப்பதன்றிக்கிளர்பெரும்போரெனாத்
தொடைப்பெரும்பவனத்தனல்சோர்தரப்
புடைப்பவோடினன்போர்மதமாவனான்.

      (இ -ள்.) போர் மதம் மா அனான்-போர்செய்யவல்ல மதக்களிறு
போன்றவனான, பெரு மடைப்பள்ளி எய்திய மாருதி - பெரிய
மடைப்பள்ளியைச் சேர்ந்திருந்த வீமன், 'இ கிளர் பெரும் போர் கிடைப்பது
அன்று - இந்த உற்சாகத்துடன்செய்யத்தக்க பெரும்போரானது (எப்போதும்)
கிடைக்கக் கூடியது அன்று,' எனா - என்று (போரைக் குறித்து) மகிழ்ச்சி
கொண்டு, தொடை பெரும் பவனத்து-(விரைந்து செல்வதால்) தொடையினின்று
வெளிப்படுகின்ற பெருங்காற்றிலே, அனல் சோர்தர புடைப்ப - நெருப்புத்
தோன்றுமாறு (ஒருதுடையோடு மற்றொருதுடை) மோத, ஓடினன்-: (எ - று.)

     துடைகள் ஒன்றோடொன்று மோதிப் பெருங்காற்றை
வெளிப்படுத்துவதால்அந்த அதிர்ச்சியில் நெருப்புத்தோன்றி
மூளுவதாயிற்றென்க.துடைப்பரும்பவனத்துஎன்ற பாடத்துக்கு - அழித்தற்கு
அரிய வீட்டினின்றும்,தான்செல்லும் விசையாலே, அனல்சோர்தர ஓடினான்
என்பர்.  துடைப்பரும்புவனத்தினிற் சோர்தர என்றும் பாடம்.  (151)

  100.-இரண்டுகவிகள்-வீமசேனன்மரங்களைக்கொண்டு
உபகீசகர்களைத் துரத்திதுரத்தி யடித்து உயிர்தொலைத்ததை
கூறும்.

அகப்பொழிற்கண்டவம்மரம்யாவையும்
மிகப்பிடுங்கினன்வேரொடும்கோட்டொடும்
உகப்புடைத்தனனோடத்தொடங்கினார்
தகச்செயாமதிக்கீசகன்றம்பிமார்.

      (இ -ள்.) அகப்பொழில்-சோலையினுட்புறத்தே, கண்ட-காணப்பட்ட, அ
மரம் யாவைஉம் - அந்த மரங்களை யெல்லாம், வேரொடுஉம் கோட்டொடுஉம்
- வேரோடும் கிளையோடும், மிக பிடுங்கினன் - மிகுதியாகப் பிடுங்கி,-உக -
(அவ்வுபகீசகர்கள்) உயிர்சிந்துமாறு, புடைத்தனன் - மோதினான்; தக -
தகுதியாக, செயா - (தொழில்களைச்) செய்யமாட்டாத, மதி -
துர்ப்புத்தியையுடைய, கீசகன் தம்பிமார்-, -ஓட தொடங்கினார் - ஓட
ஆரம்பித்தார்கள்; (எ - று.)

     திரௌபதியை உயிரோடு கொளுத்துவதென்று முயன்றவ ராதலால்,
அவர்களை 'தகச்செயாமதிக் கீசகன்தம்பிமார்' என்றார்.  பிடுங்கினான் -
முற்றெச்சம்.                                                (152)