(இ -ள்.) கற்கும் - பயின்ற, யாழ்உடை - யாழையுடைய, கந்தருவர்க்கு எதிர் - கந்தர்வர்க்கு முன்னே, நேர் பொர - நேர்நின்று சண்டைசெய்ய, மானவர் உடன் நிற்பர்ஓ - மனிதர் உடன் நிற்கவல்லரோ? [வல்லரல்லர்]: (ஆதலால்), கிற்கும் மைந்து உடை - ஆற்றல்படைத்த வலிமையையுடைய, கீசகர் யாவரும் -, தகவு ஒன்று இலார் - நற்குணம் சிறிதும் இல்லாதவராய், தற்கினால் - செருக்கினால், மடிந்தார் - இறந்திட்டார்; (எ - று.) - கிற்கும் மைந்து - செய்யும் வலிமையுமாம். (155) 104. | என்றுமாநகர்யாவுநடுங்கிடத் துன்றுகங்குலிற்சோரர்தமாருயிர் பொன்றுவித்தபொருநனும்பூவையும் சென்றுதத்தமசேர்விடநண்ணினார். |
(இ -ள்.) என்று - என்றுசொல்லி, மா நகர் யாஉம் - பெரிய நகரத்தி லுள்ள ஜநங்களெல்லாம், நடுங்கிட - நடுங்காநிற்க,- துன்று கங்குலில் - (இருள்) நிரம்பிய இரவிலே, சோரர்தம் - வஞ்சனைக் குணமுடையரான கீசகரின், ஆர் உயிர் - அருமையான உயிரை, பொன்று வித்த - அழியுமாறு செய்த, பொருநன்உம் - வீரனாகிய வீமனும், பூவையும் - நாகணவாய்ப் பறவைபோன்று கொஞ்சிப்பேசுந் தன்மையளான திரௌபதியும், சென்று - (ஆங்குநின்றும்) போய், தத்தம் - தம் தமக்குஉரிய, சேர்வு இடம் - சேர்தற்கு உரிய இடத்தை, நண்ணினார் - சேர்ந்தார்கள்; (எ - று.) நகர்- இடவாகுபெயர். பூவை - உவமவாகுபெயர். 'வண்ண மகளோ பேரழகுபடைத்த வடிவினள்: அவளைக் கண்ணெடுத்துப் பார்ப்பவரோ கீசகர்கதியைக் கந்தருவதேவரா லடைவது திண்ணம்: ஆதலால், இவளை இந்நகரில் தங்கஇடங்கொடுக்காமல் அப்பாற் செல்லச் செய்வதே தகுதி' என நகரத்தவர் விராடனிடம் வேண்ட, விராடனும் வண்ணமகளை நகரைவிட்டுப் போய்விடுமாறு சுதேஷ்ணை மூலம் தெரிவிக்க, அரசகட்டளையைக் கேட்ட வண்ணமகள் ஒரு திங்கள் அங்குவசிக்க அநுமதிகொடுக்குமாறு வேண்டிக்கொள்ள, சுதேஷ்ணை உடன்பட்டனளென்னும் முதனூல். (156) 105.-சூரியோதயமாகஇரவில்நடந்த போர் எங்கும் பிரசித்தமாதல். கரியகங்குல்கனையிருட்போர்வையோடு இரியவந்தவிருள்வலிதன்னினும் புரியினன்றுபுரிந்தவப்போரும்வன் கிரியின்மன்னுங்கிளர்விளக்கானதே. |
(இ -ள்.) கரிய கங்குல் - கருநிறமாகத் தோன்றும் இரவானது, கனை இருள் போர்வையோடு இரிய - நெருங்கிய இருளாகிய போர்வையோடு நிலைகெட்டோட, வந்த-அப்போது உதித்த, இருள்வலி தன்னின்உம் - சூரியனைக்காட்டிலும், புரியின் அன்று புரிந்த அப்போர்உம் - அந்த விராடநகரத்திலே அன்று செய்யப்பட்ட |