பக்கம் எண் :

96பாரதம்விராட பருவம்

பாரெயிற்றுழுவான்' என்றார்.  வினை - இங்கே, பிரளயாபத்து நேர்தற்கு ஏற்ற
தீவினை.  நாமத்துக்கு நன்மை - தன்னை ஒருகால் ஓதியவர்க்கும் உயர்பதம்
அளித்தல்.  தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
என்னும் பிறப்பேழனுள் முதலைந்தனையுங் கூறி, மற்றையவற்றை
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்: [உபலக்ஷணமாவது - ஒருமொழி ஒழிந்த தன்
இனங்களையும் குறிப்பது.] எலும்பில்லாத உடம்பினதாதலால், 'புன் புழு'
எனப்பட்டது; "எழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பி, னென்பொழி யாக்கை"
என்றார் பிறரும்.

     தொழுவார், உழுவான் என்பன - இயல்பினால் இறந்தகாலம்
எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதிகள். கோலம், வேலா,
நாமம், ஸு ரர், நரர் - வடசொற்கள்.  எயிறு - இங்கே, வக்கிரதந்தம்.
உழுவானை = உழுவானது; இரண்டனுருபு, ஆறனுருபின் பொருளில் வந்தது;
உருபுமயக்கம்.  'ஆக' என்ற வினையெச்சம் - இடைச்சொல் தன்மைப்பட்டு,
விகற்பப்பொருளில் வந்தது; ஆனதுபற்றியே, இயல்பாயிற்று:  அது,
எண்ணுப்பொருளும் இங்குக்கொண்டுள்ளது.  வழுவாத என்பதனைச் சுரர்
முதலிய எல்லாப் பிறவிகளோடுங் கூட்டுக.  ஸு ரரென்னும் வடசொல்லுக்கு -
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினினின்று உண்டா சுரையை [வாருணி
யென்னும் மதுவை] உண்டவரென்பது பொருள்.  'பிறந்தாலும்' என்ற
எதிர்மறையும்மை, அவர்கட்குப் பிறப்பின்மையை விளக்கிநின்றது.  காணும்
தேற்றப்பொருளதாய் வந்த முன்னிலை யிடைச்சொல்.

     இதுமுதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும்  முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                           (160)

2.-கவிக்கூற்று: துரியோதனன்நிரைகவர்செய்தியைக்
கூறுவேனெனல்.

மூதாரழற்பாலைவனமுந்தடஞ்சரரன்முதுகுன்றமும்
சூதாடியழிவுற்றடைந்தோர்கள்சரிதங்கள்சொன்னோமினிப்
பாதாரவிந்தத்துமருவார்விழக்கொண்டுபாராளும்வெங்
கோதார்மனத்தோன்விராடன்ற னிரைகொண்டகோள்கூறுவாம்.

      (இ -ள்.) சூது ஆடி - (துரியோதனனுக்கு மாமனான சகுனியுடனே)
சூதாட்டமாடி, அழிவு உற்று - (அந்த ஆட்டத்தில்) தோல்வியடைந்து,
(அதனால்), முது ஆர் அழல் பாலைவனம்உம் - பழமையாக
[இயற்கையாகவே] மிக்க வெப்பமுள்ள பாலைநிலங்களையுடைய காடுகளையும்,
தட சாரல் முதுகுன்றம்உம் - பெரிய சாரல்களையுடைய பழமையான
மலைகளையும், அடைந்தோர்கள் - அடைந்து வசித்த பாண்டவர்களுடைய,
சரி தங்கள் - அஞ்ஞாதவாசக்காலத்து நடந்த வரலாறுகள் சிலவற்றை,
சொன்னோம் - (யாம் கீழ்க்) கூறினோம்; இனி - இனிமேல், பாத அரவிந்தத்து
- (தனது) தாமரைமலர்