போலும்பாதங்களிலே, மருவார் - பகைவர், விழ - (சரணமாக வந்து) விழுந்து தண்டனிட, கொண்டு - (அவர்களைக் கடைக்கண்ணால்) நோக்கிக்கொண்டு, பார் ஆளும் - பூமியை அரசாளுகின்ற, வெம்கோது ஆர் மனத்தோன் - கொடிய குற்றங்கள் நிரம்பிய மனத்தையுடையவனான துரியோதனன், விராடன்தன் - விராடராசனது, நிரை - பசுக்களை, கொண்ட -கவர்ந்து கொண்டுபோன, கோள்-வரலாற்றை, கூறுவாம் - சொல்வோம்; (எ -று.)
கீழ்ப் பாண்டவசரிதம் கூறிய தாம் இனித்துரியோதனன் நிரைகவர்ந்த வரலாற்றைக் கூறப்போவதைத் தெரிவிக்கின்றார்: படிப்பவர் நன்கு அறியும்பொருட்டுக் கீழ்நடந்தது இன்னது, இனி நடப்பது இன்னது என்று கூறுவது, ஒரு மரபு. சூரிய அக்கினிகளின் சேர்க்கையா லல்லாமல் இயல்பிலேயே வெப்ப மமைந்த தென்பார் 'மூதாரழற் பாலைவனம்' என்றது. பகைவர்கள் இவனது கடைக்கண்பார்வையையே பெரும்பேறாகக் கருதிக் காலில் விழுகின்றன ரென்பதும், இவன் அவர்களது அடிவீழ்ச்சியைக் கண்ணோக்கினால் உகக்கின்றானென்பதும் விளங்க, 'பாதாரவிந்தத்து மருவார்விழக் கண்டு' என்றார்; இதனால், அடங்காதவர்களையெல்லாம் அடக்குந் திறமையுடையவ னென்பதும் வணங்காமுடி மன்ன னென்பதும் தொனிக்கின்றன. இனி, விழக் கொண்டு-விழுவதனால் அவர்களைத் தன்னைச் சேர்ந்தவராக அங்கீகரித்து எனினுமாம். கோது - கொடுங்கோன்மை, பிறராக்கம் பொறாமை, செய்ந்நன்றியறிவின்மை முதலியன. பாலை- நீரும் நிழலும் இல்லாத சுரமும், சுரஞ்சார்ந்த இடமும். தட + சாரல் = தடஞ்சாரல். தட-பெருமையுணர்த்தும் உரிச்சொல். சாரல் - மலைப்பக்கம்; மலையைச்சார்ந்துள்ளதாகிய பக்கத்துக்குத் தொழிலாகுபெயர். குன்றம், அம் - சாரியை. அழிவுற்று - இராச்சியம் முதலிய செல்வமனைத்தையும் இழந்து. சரிதங்கள் - மற்போர், கீசகன்வதை முதலியன. சொன்னோம் - கவிமரபுபற்றி வந்தது; தனித்தன்மைப்பன்மை. பாதாரவிந்த மென்னும் முன்பின்னாகத் தொக்குவந்த உவமத்தொகை - வடநூன்முடிபு, தீர்க்கசந்தி; மருவார் - (தன்னோடு) கூடாதவர்; எனவே, பகைவர். கோள் - கொள்கை: முதனிலை திரிந்த தொழிற்பெயர். (161) 3.-பாண்டவர்களைக் கண்டுபிடிக்கும் படி துரியோதனன் அனுப்பிய ஒற்றர் மீண்டும்வருதல். ஈராறுமொன்றுஞ்சுரர்க்குள்ளநாள்சென்றவினிநம்முடன் பாராளவருமுன்னரடலைவருறைநாடுபார்மின்களென்று ஓராயிரங்கோடியொற்றாள்விடுத்தானவ்வொற்றாள்களும் வாராழிசூழெல்லையுறவோடிவிரைவின்கண்வந்தார்களே. |
(இ -ள்.) (அப்பொழுது துரியோதனன்), 'ஈர் ஆறுஉம் ஒன்றுஉம் சுரர்க்கு உள்ள நாள் - தேவமானத்தாற் பதின்மூன்று |