கொடி ஊசல் - பொன்மயமான மெல்லியகொடிகளாலியன்ற ஊஞ்சலிலாடுவதையும், வழங்கு தண்புனல் ஆடல் உம் - இடைவிடாது செல்கின்ற குளிர்ந்தநீரிலே விளையாடுதலையும்,- துறை வரி வண்டல் ஆடல்உம் - நீர்த்துறைகளிலே அழகிய மணலைக்கொண்டு (சிற்றிலிழைத்தல்முதலிய) ஆடல்புரிதலையும், மாறி - நீங்கி,- முழங்கு சங்குஇனம் தவழ்தரு பனி நிலா முன்றில்உம் - ஒலிக்கின்ற சங்குகளின் கூட்டம் தவழப்பெற்ற குளிர்ந்த நிலாவைக்கொண்ட வீட்டின் முன்னிடமும், செய்குன்றுஉம் - (வினோதார்த்தமாகச் சமைத்த) கட்டுமலைகளும், தழங்கு செம் சுரும்பு எழு மலர் சோலை உம் - ஒலிக்கின்ற அழகிய சுரும்பினம் மொய்த்தெழப்பெற்ற பூஞ்சோலையும், தனித்தனி-, மறந்திட்டாள்-; (எ-று.) வேற்றிடத்து மனஞ்செல்லாமல் திருந்திக் கடவுள் முனிவரின் பூசனையிலேயே கருத்தாயிருந்தனள் குந்திபோசன்புதல்வியென்க. (182) 28.- துருவாசன் மகிழ்வுற, பிரதை பன்னிரண்டுமாதம் பணிவிடை புரிதல். தொழுதுதாளினைச்செய்யபஞ்செழுதினுந் தோளினைச் செழுந் தொய்யில், எழுதினும்பொறாவிளமையண்முதுக்குறைந் தியாதியாதுரைசெய்தான், முழுதுநெஞ்சுறுகோபமேமிகமிகு முனிவரன்மகிழவெய்தப், பழுதிலன்புடனியற்றினளொன்றுபோற் பன்னிருமதிசேர. |
(இ-ள்.) (தோழிமார்), தொழுது - வணங்கி, தாளினை - பாதங்களில், செய்ய பஞ்சு எழுதின்உம் - செம்பஞ்சுக்குழம்பை யெழுதினாலும், தோளினை - தோளில், செழுந் தொய்யில் எழுதின்உம் - அழகிய தொய்யிலை யெழுதினாலும், பொறா - தாங்கமாட்டாத, இளமையள் - இளமையை யுடையவளாகிய அந்தப்பிரதை,- நெஞ்சு முழுவதுஉம் உறு கோபம்ஏ மிக மிகு முனிவரன்- நெஞ்சுமுழுவதும் மிக்ககோபமே மிகுந்துள்ள ரிஷித்தலைவனாகிய துருவாசன், யாது யாது உரைசெய்தான் - எதைஎதைச்சொன்னானோ, (அவற்றையெல்லாம்), மகிழ்வு எய்த - (அம்முனிவரன்) மகிழ்ச்சியடையும்படி, முதுக்குறைந்து - பேரறிவுமிகுந்து, பழுது இல் அன்புடன் - குற்றமில்லாத அன்புடனே, ஒன்றுபோல் - ஒரேவகையாக, சேர - பொருந்த, பன்னிருமதி - பன்னிரண்டுமாதம், இயற்றினள் - செய்தாள்; யாதுயாதுஉரைசெய்தான் என்றதனால், அவனேவியசெயல் செய்தற்கரியது என்பது பெறப்படும்: "ஸ யத்யத் ஆஜ்ஞாபய திஸ்ம துஷ்கரம்" என்று பாலபாரதத்தில்வருவதும், மேற்செய்யுளில் "எனதேவ லரிதெனாது" என்று வருவதும்காண்க. (183) 29,30.- இரண்டுகவிகள் - பிரதையின் பணிவிடையால் மனமுவந்த துருவாசன் ஒருமந்திரத்தையுபதேசித்துச் செல்ல, பிரதையும் தன்மனைசேர்தலைத் தெரிவிக்கும். பிரதைதன்னையத்தபோநிதிவருகெனப் பெரிதுவந்தெனதேவல் அரிதெனாதுநீயியற்றினைநெடுங்கட லவனிமேல்யார்வல்லார் தெரிவைகேளெனச்செவிப்படுத்தொருமறை தேவரில்யார்யாரைக் கருதிநீவரவழைத்தனையவரவர் கணத்துநின்கரஞ்சேர்வார். |
|