பக்கம் எண் :

102பாரதம்ஆதி பருவம்

தம்மையொப்பதொர்மகவையுந்தருகுவர் தவப்பயனெனப்பெற்ற
இம்மறைப்பயனிம்மையிலுனக்குவந் தெய்தியதெனக்கூறி
அம்முனிப்பெருங்கடவுளுந்தபோவன மடைந்தனனவளுந்தான்
செம்மனத்தொடுபயின்றரமகளெனச் செல்வமாமனைசேர்ந்தாள்.

    (இ-ள்.)  (29) அ தபோநிதி - அந்தமுனிவன், பெரிது உவந்து -
(பன்னிருமாதம் பிரதைசெய்த பணிவிடையால்) மிகவுஞ் சந்தோஷித்து, வருக என
- வருவாயாக என்றுசொல்லி, பிரதை தன்னை - அந்தக் குந்தியைநோக்கி,
'எனது ஏவல் - என்னுடைய கட்டளையை, அரிது எனாது-, நீ-, இயற்றினை -
செய்தாய்: நெடுங்கடல் அவனி மேல் யார் வல்லார் - (உன்னைப்போற்
பணிவிடை செய்யப்) பெரிய கடலினாற் சூழப்பட்ட இந்தப்பூமியில்
யாவர்வல்லார்? தெரிவை - பெண்ணே! கேள்-,' என - என்று, ஒரு மறை -
ஒருவேதமந்திரத்தை, செவிப்படுத்து - (அந்தப் பிரதையின்) காதிலேயோதி,
தேவரில் - தேவர்கட்குள்ளே, யார் யாரை-, கருதி-, 'நீ-, வர அழைத்தனை -
(இந்த மந்திரத்தைச்சொல்லி) வருமாறு கூப்பிடுவாயோ, அவர் அவர் -
அந்தந்தத் தேவர், கணத்து - ஒருகணப்போதில், நின் கரம் சேர்வார் -
உன்கையைச் சேர்வார்கள் [உன்வசமாவார்கள்]; (30) (அன்றியும்) தம்மை ஒப்பது
- தம்மையொத்துள்ளானாகிய, ஒர் மகவைஉம் - ஒருபுத்திரனையும், தருகுவர்-
:(யான்), தவம் பயன்என பெற்ற - தவத்தின்பயனாகு மென்னுமாறு
அரிதிலடைந்த, இ-இந்த, மறை-வேதத்தின், பயன்-, இம்மையில் -
இப்பிறவியில்தானே, உனக்கு வந்து எய்தியது - உனக்கு வந்துசேர்ந்தது,' என
கூறி - என்றுசொல்லி,- அ கடவுள் பெரு முனிஉம்- அந்தத்  தெய்வத்
தன்மையுள்ள பெருமுனிவரும், தபோவனம் - (தான்) தவம்புரியும் வனத்தை,
அடைந்தனன்-; அவள்உம் - அந்தப்பிரதையும், தான்-, செம் மனத்தொடு -
நல்ல மனத்தோடு, பயின்று - பொருந்தி, அரமகள் என - தெய்வமாதுபோல,
செல்வம் மா மனை - (தனக்குரிய) செல்வமுள்ள சிறந்தமனையிலே, சேர்ந்தாள்-;
(எ-று.)

     தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப்
பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க.   (184,185)

31.-மறைப்பயனைக் காணக் கன்னிகை குந்தி நிலா
 முற்றத்திலே அம்மந்திரத்தைச் சூரியனைக்கருதி யுச்சரிக்க,
அன்னான்அங்குவருதல்.

ததையும்வண்டிமிர்கருங்குழற்கன்னியத் தனிமறைப்பயன்காண்பான்
சுதைநிலாவெழுமாளிகைத்தலத்திடைத் தூநிலாவெழுமுன்றில்
இதையமாமலர்களிக்கநின்றன்பினோ டியம்பலுமெதிரோடி
உதையபானுவுமலர்மிசையளியென வொருகணந்தனில்வந்தான்.

     (இ-ள்.) ததையும் நெருங்கிய, வண்டு - வண்டுகள், இமிர் - ஒலிக்கின்ற,
கருங்குழல் - கரிய கூந்தலையுடைய, கன்னி-, அ தனி மறை பயன் காண்பான் -
அந்த ஒப்பற்ற வேதமந்திரத்தின் பயனை யறிய வேண்டி, சுதை நிலா எழு -
(பூசிய) சுண்ணாம்பினால் வெண்ணிலாத் தோன்றுகின்ற, மாளிகை தலத்திடை
-