மாளிகையில், தூ நிலா எழு முன்றில் - பரிசுத்தமான நிலாத் தோன்றுகின்ற முற்றத்திலே [மேன்மாடத்திலே], இதையம் மாமலர் களிக்கநின்று - இதயமாகிய சிறந்தமலர்மகிழுமாறு இருந்துகொண்டு, (சூரியனைக்கருதி), அன்பினோடு-, இயம்பலும்- (அந்த மந்திரத்தை) உச்சரித்தவுடனே, எதிர் ஓடி- (அந்தப்பிரதைக்கு) எதிராகவிரைந்துவந்து, உதையம்பானுஉம் - உதயகாலத்துச்சூரியனும், மலர்மிசை அளி என - மலரில்வண்டுமொய்ப்பது போல,ஒரு கணந்தனில் - ஒரு கணப்போதில், வந்தான்-; (எ-று.) மேன்மாடத்திலே நிலாமுற்றத்திலிருந்து பிரதை துருவாச முனிவ னுபதேசித்த வேதமந்திரத்தை யுச்சரித்து உதித்த சூரியனை நினைக்க உடனே அங்கு அவன் தோன்றினா னென்க. (186) 32.- வந்த சூரியன் அந்தப்பிரதையை அணைத்தல். செம்பொனாடையுங்கவசகுண்டலங்களுந் திகழ்மணிமுடியாரம் பைம்பொனங்கதம்புனையவயவங்களும் பவளமேனியுமாகி வம்பறாதமெய்ப்பதுமினியெனச்செழு மறைநுவன்மடப்பாவை அம்புயானனமலர்வுறக்கரங்களா லணைத்தனனழகெய்த. |
(இ-ள்.) செம் பொன் ஆடைஉம் - செந்நிறமுள்ள பொற்பட்டாடையும் [பீதாம்பரமும்], கவசம் குண்டலங்கள்உம்-,திகழ்மணி முடி - விளங்குகின்ற இரத்தினகிரீடமும், ஆரம் - ஆரமும், பைம் பொன் அங்கதம் புனை அவயவங்கள்உம்- பசும்பொன்னாலியன்ற தோள்வளையலையணிந்த புயங்களும், பவளம் மேனி உம் - பவழம் போன்ற செந்நிறத்திருமேனியும் ஆகி - பெற்றுவந்து,- வம்பு அறாத மெய் பதுமினி என - நறுமணம் நீங்காத உடல் படைத்த பதுமினியைப்போல, செழு மறை நுவல் மடம் பாவை - பயன் விளைக்குந் தன்மையுள்ள வேதமந்திரத்தைக் கூறிய அந்த மடந்தையின், அம்புயம் ஆனனம் - தாமரைபோன்ற முகம், மலர்வு உற - மலர்ச்சிடைய, கரங்களால்-, அழகுஎய்த - அழகு பொருந்த, அணைத்தனன்-; சூரியன் தனதுகிரணங்களால் நறுமணம்நீங்காத தாமரை யோடையின் தாமரை முகம்மலரத் தழுவுவதுபோல, தன்னுடலில் நறுமணம்நீங்காத பதுமினியென்னும் உத்தமசாதிமாதரான குந்தியின் தாமரைபோன்றமுகம் மலர்ச்சியடையத் தன்கைகளாலணைத்தன னென்பதாம். சிலேடையையும் உருவகத்தையும் அங்கமாகக் கொண்டுவந்த உவமையணி. மாதராரில், பதுமினி சித்ரிணி அத்தினி சங்கினி என்று நான்குசாதியுள்ளன என்பதை, வாத்ஸ்யாயனம் முதலிய நூல்களா லறியலாம். பதுமினிசாதிமாதின் உடல் நறுமணம் வீசு மென்பது, நூற்கொள்கை. (187) 33.- 'மடந்தையரின் கற்பை யறிபவனான நீ என்னைத் தொடாதே' என்று பிரதை கூற, சூரியன் கோபித்துக் கூறலுறுதல். கன்னிகன்னியென்கைதொடேன்மடந்தையர் கற்புநீயறிகிற்றி, என்னமெய்குலைந்தலமரநாணினா ளிதயமும்வேறாகி, அன்னமென்னடையஞ்சினளரற்றலு மருகுறான்விடப்போய்நின்று, உன்னியென்னைநீயழைத்ததென்பெறவெனவுருத்தனனுரைசெய்வான். |
|