பூண்ட, மழு உடை - மழுப்படையையுடைய, வர ராமன் - சிறந்த பரசுராமனது, பத யுகம் தொழூஉ - இருதாள்களிலும் வணங்கி, வரிசிலை முதலிய பல படைகள்உம் கற்று - கட்டமைந்த வில் முதலிய பல படைக்கலங்களையும் பயின்று, கதிரவன் தரு - சூரிய பகவான் பெற்ற, கன்னன் என்று - கர்ணனென்று, உலகு எலாம் கை தொழும் கவின் - உலகத்தாரெல்லாராலுங் கைகுவிக்கத்தக்க அழகை, பெற்றான்-; (எ-று.) இந்தக்கர்ணன் அந்தணவடிவங்கொண்டு பரசுராமனைத் தொழுது அஸ்திர சஸ்திரங்களிற் பயின்றானென்ப. பலபடைகளும் என்ற இடத்து உம்மையை முற்றுப்பொருளாகவன்றி எச்சப் பொருளதாகக்கொண்டு, ஏனைக்கலைகளுங் கற்று என்ப. (197) வேறு. 43.-அந்தப்பிரதைக்குச் சுயம்வரம் ஏற்படுத்தவே, மன்னவர்திரளுதல். கன்னற் பயந்த கதிர்வெம்முலைக் கன்னி தன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை யுவகை யோடு மன்னர்க் கெழுத மடப்பாவை வரிக்கு மென்று சென்னற் படைவேன் முடிமன்னவர் சென்று சேர்ந்தார். |
(இ-ள்.) கன்னன் பயந்த - கன்னனைப்பெற்ற, கதிர் வெம்முலை கன்னி தன்னை - ஒளிபொருந்திய விரும்பத்தக்க முலையையுடைய கன்னிகையை [பிரதையென்பாளை], முன்னர் பயந்தோன் - முன்பு பெற்றவன், முகம் ஓலை - [சுயம்வரத்தைப்பற்றிய] திருமுகவோலையை, உவகையோடு - மகிழ்ச்சியோடு, மன்னவரக்கு எழுத-,- 'மடம்பாவை - மடமைக்குணமுள்ள பாவைபோன்ற அந்தப்பிரதை, வரிக்கும் - (நம்மை) விரும்பி மாலைசூட்டுவாள், ' என்று -, செல் நல் வேல்படை முடி மன்னர் - (போரிற்) செல்லவல்ல சிறந்த வேற்படையையேந்திய முடிசூடிய அரசர், (அந்தச் சுயம்வரத்தின்பொருட்டு), சென்று சேர்ந்தார்-; (எ-று.)- சென்னற்படிவேல் என்றும் பாடம். இதுமுதல் இருபத்துநான்கு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று காய்ச்சீர் அல்லது கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த கலிநிலைத்துறைகள். இந்தப் பகுப்பில் அடிக்குப் பதினான்கெழுத்துக்கள் அல்லது பதினைந்தெழுத்துக்களைக்கொண்டு செய்யுள்கள் உள்ளன. (198) 44.-குந்தி பலமன்னரிடையே மணமாலையைப் பாண்டுவுக்கே சூட்டுதல். உருவஞ்சிறந்துபலகோளு முதிக்குமேனும் மருவுங்குமுத மதிகண்டு மலருமாபோல் பருவஞ்செய்பைம்பொற்கொடியன்னவள் பாண்டுவென்னும் நிருபன்றனக்கேமணங்கூர் பெருநேயமுற்றாள். |
(இ-ள்.) உருவம் சிறந்து - வடிவத்தினான் மேம்பட்டு, பல கோள்உம் - பலகிரகங்களும், உதிக்கும் ஏன்உம் - தோன்றுமானாலும்,- மருவும்- (நீர்நிலையிற்) பொருந்திய, குமுதம் - ஆம்பல், மதி கண்டு - சந்திரனைக் கண்டு, மலரும் ஆபோல் - மலரும் விதம் |